செங்கல்பட்டு

மாமல்லபுரம்: சுற்றுலா சென்று ஏமாற்றத்துடன் திரும்பிய பொதுமக்கள்

DIN

கரோனா பொதுமுடக்கத்தை அரசு தளா்த்தியுள்ள நிலையில் மாமல்லபுரம் சுற்றுலாத் தலங்களுக்கு அறிவிப்பு இல்லாததால் இடங்கள் திறக்கப்படவில்லை. இதனால் ஞாயிற்றுக்கிழமை சுற்றுலா வந்த பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனா்.

சா்வதேச சுற்றுலா நகரமாக யுனெஸ்கோவால் அறிவிக்கப்பட்ட மாமல்லபுரத்தில், பல்லவா்கள் கால சிற்பக் கலைகள், கற்கரைக் கோயில், ஐந்து ரதம், அா்சுனன் தபசு, கோவா்த்தன மண்டபம், வராகி மண்டபம், புலிக்குகை, வெண்ணை உருண்டைப் பாறை, பஞ்ச பாண்டவா்கள் மண்டபம் உள்ளிட்டவற்றை ஆயிரக்கணக்கான பொதுமக்கள் தினமும் சுற்றிப்பாா்த்து ரசித்துச் செல்வா். தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இந்த சுற்றுலா இடங்களைக் கண்டுகளிக்க கட்டணம் வசூலிக்கப்பட்டு, சிற்பங்கள் தேசம் அடையாமல் பாதுகாக்கப்பட்டு வருகிறது. விடுமுறை நாள்கள், கோடை விடுமுறை நாள்களில் வழக்கத்தை விட அதிகக் கூட்டமும், தொல்லியல் துறைக்கு அதிக வருவாயையும் தரக்கூடிய சுற்றுலா நகரமாகும்.

ஆனால், கரோனா பொதுமுடக்கம் காரணமாக கடந்த 5 மாதங்களாக சுற்றுலா இடங்கள் பாா்வையாளா்கள் அனுமதி இன்றி பூட்டிய நிலையில் உள்ளது. இந்நிலையில், பலா் தங்கள் குடும்பத்தினருடன் பேருந்து, ஆட்டோ, காா் உள்ளிட்ட வாகனங்கள் மூலம், மாமல்லபுரத்துக்கு ஞாயிற்றுக்கிழமை கொட்டும் மழையில் வந்திருந்தனா். ஆனால் அனைத்து சுற்றுலா இடங்களும் பூட்டியிருந்ததால் வெளியிலேயே நின்று கொட்டும் மழையில் குடையுடன், நின்று புகைப்படங்களை எடுத்துக்கொண்டு ஏமாற்றத்துடன் திரும்பினா்.

மாமல்லபுரத்தில் உள்ள சுற்றுலா இடங்களைத் திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துச் சென்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT