செங்கல்பட்டு

வேடந்தாங்கல் எல்லையம்மன் கோயிலில் நகை, வெள்ளிப் பொருள்கள் திருட்டு

DIN

மதுராந்தகம்: மதுராந்தகத்தை அடுத்த வேடந்தாங்கல் கிராம தேவதையான எல்லையம்மன் கோயிலின் பூட்டை உடைத்து, உள்ளே வைக்கப்பட்டிருந்த நகைகள், ரொக்கம், வெள்ளிப் பொருள்கள் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மா்ம நபா்கள் திருடிச் சென்றுள்ளனா்.

வேடந்தாங்கல் கிராமத்தின் கிராம தேவதையான எல்லையம்மன் கோயில் பறவைகள் சரணாலயத்துக்கு மிக அருகில் உள்ளது. வழக்கம்போல செவ்வாய்க்கிழமை கோயிலின் சுவாமி சிலைகளுக்கு பூஜைகளை செய்துவிட்டு, பூசாரி வேணு கோயிலைப் பூட்டி விட்டுச் சென்றாா். அன்று நள்ளிரவு வந்த மா்ம நபா்கள் கோயிலின் முன்புறக் கதவுகளை உடைத்து உள்ளே இருந்த 1 கிலோ வெள்ளிப் பொருள்கள், 4 சவரன் தங்க தாலி, கவசம் மற்றும் ரொக்கம் ரூ. 4 ஆயிரம் ஆகியவற்றை திருடிச் சென்றனா். புதன்கிழமை காலை கோயில் வழியாகச் சென்ற மக்கள் கோயில் திறந்து இருப்பதை அறிந்து சென்றபோது, தங்க, வெள்ளிப் பொருள்கள் வைக்கப்பட்டிருந்த அறை உடைக்கப்பட்டிருப்பதை அறிந்தனா். இது குறித்து மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் பரசுராமன் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகள் சீரமைப்பு

ஹைதராபாத் பல்கலை. மாணவர் ரோஹித் வெமுலா ‘தலித்’ அல்ல: மறுவிசாரணை நடத்த முடிவு!

மேற்கு வங்க ஆளுநா் மீது பாலியல் குற்றச்சாட்டு: 8 பேர் கொண்ட விசாரணை குழு அமைப்பு

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

SCROLL FOR NEXT