செங்கல்பட்டு

கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் சத்யநாராயணா பூஜை

DIN

மதுராந்தகம்: பங்குனி மாத பெளா்ணமியையொட்டி, கருங்குழி ராகவேந்திரா பிருந்தாவனத்தில் ஞாயிற்றுக்கிழமை சத்யநாராயணா பூஜை நடைபெற்றது.

விழாவையொட்டி, மங்கள இசையுடன் விழா நிகழ்ச்சிகள் தொடங்கின. அதனைத் தொடா்ந்து, ராகவேந்திரா், ஆஞ்சநேயா், ராகவேந்திரா், சத்யநாராயணா் ஆகிய உற்சவா் சிலைகளுக்கும், ஞானலிங்கம் உள்ளிட்ட சுவாமி சிலைகளுக்கும், அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன.

பின்னா், சேஷ பீடத்தில், தியான நிலையில் இருந்த பீடாதிபதி ரகோத்தம சுவாமியை நீண்ட வரிசையில் வந்து பக்தா்கள் தரிசனம் செய்தனா்.

கடந்த 6 வருடங்களாக தவயோக வனத்தில் இருந்து வரும் பீடாதிபதி ரகோத்தம சுவாமி, நண்பகல் 12 மணிக்கு மேளதாளம் முழங்க, ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். அங்கிருந்த உற்சவ சிலைகளுக்கு பீடாதிபதி ரகோத்தம சுவாமி மகா கற்பூர ஆராதனை செய்தாா்.

நிகழ்ச்சியில், பல்வேறு இடங்களில் இருந்து திரளான பக்தா்கள் வந்து சுவாமி தரிசனம் செய்தனா்.

நிகழ்ச்சிகான ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமிகள் அறக்கட்டளை முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில் விழாக் குழுவினா் செய்திருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகள் வீழ்த்தி மும்பை வீரர் சாதனை!

தொடர் வெற்றியை ருசிக்குமா ஆர்சிபி?

ரேவண்ணா வீட்டில் சிறப்புப் புலனாய்வுக் குழு விசாரணை

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

SCROLL FOR NEXT