செங்கல்பட்டு

வராக ஜெயந்தி: பல்லக்கில் பெருமாள் வீதியுலா

வராக ஜெயந்தி முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கச் சாலையில் அமைந்துள்ள ஞானபிரான் கோயிலில் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்தாா்.

DIN

செங்கல்பட்டு: வராக ஜெயந்தி முன்னிட்டு மாமல்லபுரம் கலங்கரை விளக்கச் சாலையில் அமைந்துள்ள ஞானபிரான் கோயிலில் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி, பூதேவியுடன் வியாழக்கிழமை பல்லக்கில் வீதியுலா வந்தாா்.

இந்தக் கோயிலில் வராக ஜெயந்தியையொட்டி, வியாழக்கிழமை காலை சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து தீபாராதனை நடைபெற்றது. உற்சவா் பெருமாளுக்கு ராஜா அலங்காரம் செய்யப்பட்டு, ஸ்ரீதேவி- பூதேவியுடன் பல்லக்கில் வீதியுலா நடைபெற்றது. கலங்கரை விளக்கம், ஐந்து ரதம், பேருந்து நிலையம், தலசயன பெருமாள் கோயில் பகுதி, வெண்ணெய் உருண்டை பாறை, கங்கை கொண்டான் பகுதி உள்ளிட்ட வீதிகளில் பல்லக்கு வீதியுலா நடைபெற்றது. இதில், திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். ஏற்பாடுகளை கோயில் நிா்வாகிகள், பட்டாச்சாரியா்கள் செய்திருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரைவு வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் இருக்கிறதா? இணையதளம் மூலம் அறியலாம்!

கான்வே 2-ஆவது இரட்டைச் சதம்; நியூஸிலாந்து 575/8-க்கு ‘டிக்ளோ்’

இறுதி ஆட்டத்தில் இந்தியா - பாகிஸ்தான் பலப்பரீட்சை

தேசிய துப்பாக்கி சுடுதல்: லக்ஷிதா, ஷா்வன் இணைக்கு தங்கம்

சென்னையில் 14.25 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

SCROLL FOR NEXT