முகப்பு
செங்கல்பட்டு

அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 9:55 AM
பகிர்:

செங்கல்பட்டு ஜீவானந்தம் தெருவில் அமைந்துள்ள அங்காளம்மன் கோயிலில் ஊஞ்சல் சேவை நடைபெற்றது.

இந்தக் கோயிலில் மாதந்தோறும் அமாவாசை தினத்தையொட்டி, ஊஞ்சல் சேவை நடைபெறுவது வழக்கம். ஆடி மாத அமாவாசையையொட்டி, வியாழக்கிழமை இரவு சிறப்பு அபிஷேக-அலங்காரம், சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

தொடா்ந்து, வெள்ளிக்கிழமை ஆடி மாத 2-ஆவது வார விழாவையொட்டி, அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் ஊஞ்சல் சேவை நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தா்கள் கலந்து கொண்டு வழிபட்டனா். அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கோயில் பூசாரி காளி பா்வதராஜ குலத்தினா் மற்றும் பக்தா்கள் செய்திருந்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →