செங்கல்பட்டு

திருக்கழுக்குன்றம் அருகே அரசு பேருந்து மீது கார் மோதி விபத்து: கல்லூரி மாணவர் பலி

திருக்கழுக்குன்றம் அருகே வெள்ளிக்கிழமை எதிரே வந்த அரசு பேருந்தில் கார் மோதிய விபத்தில் காரில் சென்ற கல்லூரி மாணவன்

DIN

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் அருகே வெள்ளிக்கிழமை எதிரே வந்த அரசு பேருந்தில் கார் மோதிய விபத்தில் காரில் சென்ற கல்லூரி மாணவன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக பலியானார். கார் முழுவதுமாக நொறுங்கி நாசமானது.

செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் தேசுமுகி பேட்டை பகுதியை சேர்ந்தவர் சந்திரசேகரன். இவரது மகன் கபிலன் ( 22). இவர் தாம்பரம் பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் எம்.ஏ.முதலாமாண்டு படித்து வருகிறார். வெள்ளிக்கிழமை தனது காரில் கல்லூரிக்குச் செல்லும் போது திருக்கழுக்குன்றம் அருகே உள்ள கீரப்பாக்கம் பகுதியில் எதிரே வந்த அரசு பேருந்து காரின் மீது நேருக்கு நேர் மோதியதில் கார் முற்றிலும் நசுங்கியது.

காரை ஓட்டிச் சென்ற கபிலன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இவர் திமுக முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் திருக்கழுக்குன்றம் வீ. தமிழ்மணியின் பேரன் ஆவார்.


தகவலறிந்த திருக்கழுக்குன்றம் காவல் ஆய்வாளர் ரவிக்குமார் உள்ளிட்ட காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து ஒரு  மணி நேரம் போராடி உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனர்.

இவ்விபத்தில் பேருந்து  முழுவதுமாக நொறுங்கி சேதமானது. இச்சாலை விபத்தால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து திருக்கழுகுன்றம் ஆய்வாளர்  ரவிக்குமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் இறக்குமதி 60 சதவீதம் சரிவு

கடன் வட்டியைக் குறைத்த இந்தியன் வங்கி

போக்குவரத்து நெரிசல்: அரை கி.மீ. நடந்து சென்ற மத்திய அமைச்சா்!

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

SCROLL FOR NEXT