செங்கல்பட்டு

ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் தொடக்கம்

DIN

செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூா் மாவட்டங்களில் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளா்ச்சித் திட்டம் திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம், திருக்கழுகுன்றம் ஒன்றியம், மணமை ஊராட்சியில் சிறு, குறு, நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சா் தா.மோ.அன்பரசன் திட்டத்தைத் தொடக்கி வைத்து பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.

மாவட்ட ஆட்சியா் ராகுல் நாத் தலைமை வகித்தாா். காஞ்சிபுரம் எம்.பி. க.செல்வம் முன்னிலை வகித்தாா். செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள மொத்தம் 359 கிராம ஊராட்சிகளில் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படும்.

நிகழ்ச்சியில், 200 பயனாளிகளுக்கு தென்னங்கன்றுகள், 5 பேருக்கு கைத்தெளிப்பான் என மொத்தம் ரூ.57 லட்சத்தில் 399 பயனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை அமைச்சா் வழங்கினாா். மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்ட இயக்குநா் செல்வகுமாா், மகளிா் திட்ட இயக்குநா் ஸ்ரீதா், மணமை ஊராட்சித் தலைவா் செங்கேணி உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எச்.டி. ரேவண்ணா கைது!

ஆம்பூர் அருகே சூறாவளி காற்றுடன் கன மழை: வாழை பயிர் சேதம்

இங்க நான் தான் கிங்கு படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு - புகைப்படங்கள்

குஜராத் டைட்டன்ஸ் பேட்டிங்; அணியில் இரண்டு மாற்றங்கள்!

இந்திய அரசமைப்பின் மீது முழுவீச்சில் தாக்குதல் -ராகுல் காந்தி

SCROLL FOR NEXT