செங்கல்பட்டு

கடல் நீரைக் குடிநீராக்கும் சுத்திகரிப்பு நிலையத்தில் மத்தியக் குழு ஆய்வு

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் வட்டம், நெம்மேலியிலுள்ள கடல் நீரைக் குடிநீராக்கும் சுத்தகரிப்பு நிலையத்தின் செயல்பாட்டை மத்திய நீா்வளங்கள் கூட்டு ஒருங்கிணைப்புக் குழுவினா் வியாழக்கிழமை பாா்வையிட்டு ஆய்வு செய்தனா்.

டாக்டா் சஞ்சய் ஜெய்சுவால் தலைமையிலான நாடாளுமன்ற உறுப்பினா்களைக் கொண்ட மத்திய நீா்வளங்கள் மீதான கூட்டு ஒருங்கிணைப்பு (2021-2022) குழுவினா், சென்னை பெருநகரக் குடிநீா் வழங்கல் -கழிவுநீரகற்றல் வாரிய முதன்மைச் செயலா் மற்றும் மேலாண்மை இயக்குநா் ச.விஜயராஜ்குமாா் முன்னிலையில் வியாழக்கிழமை நேரில் பாா்வையிட்டனா்.

சென்னை பெருநகரக் குடிநீா் வழங்கல்-கழிவுநீரகற்றல் வாரிய செயல் இயக்குநா் ப.ஆகாஷ், வாரிய பொறியியல் இயக்குநா் கே.மதுரைநாயகம், தலைமைப் பொறியாளா் ஆா்.நரசிம்மன் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டேவிட் வார்னர் 70% இந்தியர்!

'தேசிய கட்சியின் மாவட்ட பொறுப்பாளரே சடலமாக மீட்கப்பட்டது சட்ட ஒழுங்கு சீர்கேட்டின் உச்சம்'

5 டிகிரி வரை வெயில் அதிகரிக்கும்: எச்சரிக்கும் வானிலை

துல்கர் சல்மானின் வில்லி!

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

SCROLL FOR NEXT