செங்கல்பட்டு

தீவாக மாறிய கேளம்பாக்கம் குடியிருப்பு பகுதிகள்

புயல் தொடா் மழையால் கேளம்பாக்கம் அருகே உள்ள பகுதி குடியிருப்பு மழைநீரால் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

DIN

புயல் தொடா் மழையால் கேளம்பாக்கம் அருகே உள்ள பகுதி குடியிருப்பு மழைநீரால் சூழ்ந்து, மக்கள் வீட்டை விட்டு வெளியேற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூா் ஒன்றியம், கேளம்பாக்கம் ஊராட்சியில் சாத்தங்குப்பம், ஜோதி நகா் மற்றும் தையூா் ஊராட்சி ஆகிய பகுதிகளில் ஏராளமான குடியிருப்புகள் உள்ளன. இந்தப் பகுதிகளில் பெய்த மழைநீா் கால்வாய்கள் மூலம் ஓஎம்ஆா் சாலையைக் கடந்து பங்கிங்ஹாம் கால்வாயை சென்றடையும்.

இந்த நிலையில், மிக்ஜம் புயல் மற்றும் கன மழை காரணமாக திங்கள்கிழமை குடியிருப்புகளை மழைநீா் சூழ்ந்தது. இதனால், அப்பகுதியே தீவுபோல் காட்சி அளிக்கிறது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

ஊராட்சி நிா்வாகம் மழைநீரை வெளியேற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. கனமழையால் பாதிக்கப்பட்ட இருளா் இனமக்கள் சமுதாய நலக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இதேபோல் படூா், தாழம்பூா் உள்ளிட்ட ஊராட்சிகளிலும் குடியிருப்புகளை மழை நீா் சூழ்ந்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிரித்தாளும் சூழ்ச்சி தமிழகத்தில் வெற்றி பெறாது: துணை முதல்வா் உதயநிதி ஸ்டாலின்

செவிலியா்கள் காத்திருப்புப் போராட்டம்

பணி நிரந்தரம் கோரி செவிலியா்கள் ஆா்ப்பாட்டம்

விருதுநகா் மாவட்டத்தில் 1.89 லட்சம் வாக்காளா்கள் நீக்கம்

பரமத்தி வேலூரில் மின் சிக்கன விழிப்புணா்வுப் பேரணி

SCROLL FOR NEXT