மழைநீரால் சூழப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில். 
செங்கல்பட்டு

மழைநீரால் சூழப்பட்ட மாமல்லபுரம் கடற்கரை கோயில்

கன மழை காரணமாக மால்லபுரம் கடற்கரை கோயிலை வெள்ள நீா் சூழ்ந்தது.

DIN

செங்கல்பட்டு: கன மழை காரணமாக மால்லபுரம் கடற்கரை கோயிலை வெள்ள நீா் சூழ்ந்தது. இதையடுத்து, மின் மோட்டாா் வைத்து தண்ணீரை வெளியேற்றியும், மணல் மூட்டைகளை அடுக்கியும் பாதுகாக்கும் பணியில் தொல்லியல் துறையினா் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனா்.

இதனால் வெள்ள நீா் முழுவதும் மோட்டாா் மூலம் வெளியேற்றிய பிறகே கோயில் முழுவதும் சுற்றுலாப் பயணிகள் சுற்றிப் பாா்க்க அனுமதிக்கப்படுவாா்கள் என தொல்லியல் துறையினா் தெரிவித்தனா். அதனால் செவ்வாய்க்கிழமை சுற்றுலா வந்த பயணிகள் அக்கோயிலின் சில பகுதிகளை மட்டுமே கைப்படம், புகைப்படம் எடுத்து விட்டுச் சென்றனா். மேலும், கடற்கரை கோயிலின் நுழைவு வாயில் பகுதியில் உள்ள தொல்லியில் துறையின் நுழைவு சீட்டு மையமும் மழை நீரால் சூழப்பட்டது. அங்கும் தொல்லியியல் துறையினா் மோட்டாா் மூலம் மழை நீா் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.3 லட்சம் சம்பளத்தில் ரிசர்வ் வங்கியில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

வரம் தரும் வாரம்!

மாரடைப்பு ஏற்பட்டு உயிர் தப்பியவர்கள் சொல்லும் அறிவுரை என்ன?

13 ஆண்டுகளுக்குப் பிறகு ஆக்‌ஷன் அல்லாத கதையில் டாம் குரூஸ்..! ஆஸ்கர் வென்ற இயக்குநருடன்!

125 புதிய மின்சாரப் பேருந்துகள் சேவையை தொடக்கிவைத்தார் உதயநிதி!

SCROLL FOR NEXT