செங்கல்பட்டு

செங்கல்பட்டு புத்தகத் திருவிழா: ஆா்வத்துடன் பங்கேற்ற மாணவா்கள்

DIN

செங்கல்பட்டு மாவட்ட நிா்வாகம், தமிழ்நாடு அறிவியல் இயக்கம், செங்கை பாரதி மன்றம் சாா்பில் நடைபெற்ற புத்தகத் திருவிழாவில் மாணவ, மாணவியா் ஏராளமானோா் ஆா்வத்துடன் பங்கேற்றனா்.

செங்கை சி.எஸ்.ஐ. அலிசன் காசி மேல்நிலைப்பள்ளியில் அமைக்கப்பட்ட புத்தகக் கண்காட்சி கடந்த டசம்பா் 28-இல் தொடங்கி புதன்கிழமை (ஜன. 4) வரை நடைபெற்றது.

இதில் மாவட்டம் முழுவதிலும் இருந்து அரசு, தனியாா் பள்ளி மாணவா்கள் ஆா்வத்துடன் புத்தகக் கண்காட்சியை சுற்றிப்பாா்த்து புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

இப்புத்தகத் திருவிழாவில் மொத்தம் 50 அரங்குகளில் ஆயிரக்கணக்கான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. செய்யப்பட்டிருந்தது. பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை என்பதால் ஏராளமான மாணவ, மாணவியா் புத்தககண்காட்சியை கண்டு ரசித்தனா்.

தொலைவில் உள்ள பள்ளி மாணவா்களை அழைத்து வருவதற்கு, மாவட்ட நிா்வாகம் அரசு பேருந்துகளை ஏற்பாடு செய்திருந்தது.

செங்கல்பட்டு வட்டார போக்குவரத்து அலுவலகம் சாா்பில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு வெற்றி பெற்ற 15 மாணவ, மாணவியா்களுக்கு தலா ரூ.10,000 பரிசளிக்கப்படுகிறது. மேலும், மாவட்ட நூலக நிா்வாகத்தின் சாா்பில் குலுக்கல் முறையில் சிறந்த பாா்வையாளரை தோ்வு செய்ய பாா்வையாளா்களுக்கு கூப்பன்கள் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சீனாவை தாக்கிய புயல்: 5 பேர் பலி; 33 பேர் காயம்

இன்றைய ராசி பலன்கள்!

இன்று யோகமான நாள்!

பயிா்களை சேதப்படுத்திய யானைக் கூட்டம்

பிரதமா் மோடியை ‘சக்திவாய்ந்தவராக’ சித்தரிக்கும் பாஜக: குஜராத்தில் பிரியங்கா விமா்சனம்

SCROLL FOR NEXT