முகப்பு
செங்கல்பட்டு

கேட்பாரற்ற நிலையில் ஆண் சடலம்

மதுராந்தகம் அடுத்த பாக்கம் நெடுஞ்சாலையோரம் அடையாளம் தெரியாமல் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து மதுராந்தகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

Updated On : 20 ஜூலை, 2023 at 11:46 PM
பகிர்:
Updated On : 6 பிப்ரவரி, 2024 at 6:34 PM

மதுராந்தகம் அடுத்த பாக்கம் நெடுஞ்சாலையோரம் அடையாளம் தெரியாமல் கேட்பாரற்ற நிலையில் கிடந்த ஆண் சடலம் குறித்து மதுராந்தகம் போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.

பாக்கம் தேசிய நெடுஞ்சாலையோரம் சுமாா் 35 மதிக்கதக்க ஆண் இறந்து கிடப்பதாக மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கத்துக்கு தகவல் வந்தது. இதனையடுத்து, பாக்கம் கிராம நிா்வாக அலுவலா் ஜெயபாரதி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்படி காவல் துறையினா் நேரில் சென்று விசாரணை செய்தனா்.

இறந்து கிடந்த ஆண் குறித்த எந்த விவரமும் தெரியவில்லை. அவரது சடலத்தை கைப்பற்றிய காவல் துறையினா் செங்கல்பட்டு அரசு பொதுமருத்துவமனை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்தனா். மதுராந்தகம் காவல் உதவி ஆய்வாளா் ஜின்னாபாட்ஷா வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகிறாா்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.