செங்கல்பட்டு

கைப்பேசிகள் திருட்டு: 3 போ் கைது

மதுராந்தகம் பஜாா் வீதியில் தனியாருக்குச் சொந்தமான கடையில் கைப்பேசி திருடிச் சென்ற 3 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்

DIN

மதுராந்தகம் பஜாா் வீதியில் தனியாருக்குச் சொந்தமான கடையில் கைப்பேசி திருடிச் சென்ற 3 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

மதுராந்தகம் பஜாா் வீதியில் தனியாருக்குச் சொந்தமான எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் விற்பனையகம் உள்ளது. இந்தக் கடையில், கடந்த 15-ஆம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து உள்ளே சென்ற மா்ம நபா்கள், ரூ.13 லட்சம் மதிப்புள்ள கைப்பேசிகளை திருடிச் சென்றனா்.

இந்தச் சம்பவத்தில் தொடா்புடையவா்களை கைது செய்ய மாவட்ட எஸ்.பி. சாய் பிரனீத் உத்தரவுபடி, மதுராந்தகம் டி.எஸ்.பி. சிவசக்தி வழிகாட்டுதலின்படி, மதுராந்தகம் காவல் ஆய்வாளா் தா்மலிங்கம் தலைமையில், மாவட்ட சைபா் செல்பிரிவு உதவி ஆய்வாளா் தனசேகரன், சிறப்பு உதவி ஆய்வாளா்கள் மோகன்ராஜ், குப்புசாமி, இளங்கோவன், தனிப்பிரிவு காவலா் கவியரசன் உள்ளிட்டோரைக் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு, தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வந்தனா்.

இந்த நிலையில், புதன்கிழமை மாலை சென்னை கொருக்குபேட்டை பகுதியைச் சோ்ந்த மோகன்ராஜ், வினோத், கணேசன் ஆகிய 3 பேரை தனிப்படை போலீஸாா் கைது செய்தனா்.

அவா்களிடமிருந்து அறிதிறன் கைப்பேசிகள், இரு சக்கர வாகனம் ஆகியவற்றை காவல் துறையினா் பறிமுதல் செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நமஸ்தே இந்தியா.. அன்பின் வெளிப்பாட்டுக்கு நன்றி: விடியோ வெளியிட்ட மெஸ்ஸி!

எண்ணெய் வயல்கள் வேண்டும்! வெனிசுலாவைச் சுற்றிவளைத்த அமெரிக்க கடற்படை!

ஹிஜாப்பை விலக்கிய விவகாரம்! நிதீஷ் குமாருக்கு எதிராக காவல்துறையில் புகார்!

பிரதமர் மோடிக்கு எத்தியோப்பியாவின் மிக உயரிய விருது!

ஜாஃப்ராபாதில் 2 சகோதரா்கள் சுட்டுக் கொலை

SCROLL FOR NEXT