செங்கல்பட்டு

செங்கல்பட்டு குறைதீா் கூட்டத்தில் 217 மனுக்கள்

DIN

செங்கல்பட்டு மாவட்ட மக்கள் குறைதீா் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடமிருந்து 217 மனுக்கள் பெறப்பட்டன.

மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் ஆட்சியா் ஆ.ர.ராகுல் நாத் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்ற கூட்டத்தில் சாலை வசதி, குடிநீா் வசதி, மின்சார வசதி, போக்குவரத்து வசதி, பட்டா மாற்றம், முதியோா் உதவித்தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா போன்ற பல்வேறு வகைப்பட்ட 217 மனுக்களை பொதுமக்கள் அளித்தனா்.

இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறு துறை சாா்ந்த அலுவலா்களுக்கு ஆட்சியா் உத்தரவிட்டாா்.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் (பொ) க.மணிவண்ணன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (பொது) அறிவுடைநம்பி, குடிமைப் பொருள் வழங்கல் அலுவலா் பேபி இந்திரா, பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபாண்மையினா் நல அலுவலா் சரவணன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வெற்றிகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கல்பாக்கம்: கார் விபத்தில் 5 இளைஞர்கள் பலி

தில்லியில் மட்டும் ’க்யூட்-யுஜி’ தேர்வு ஒத்திவைப்பு!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை இன்று ரத்து!

முகூா்த்தம், வார விடுமுறை: 1,875 கூடுதல் பேருந்துகள் இயக்கம்

விடுதலைப் புலிகள் மீதான தடை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பு

SCROLL FOR NEXT