செங்கல்பட்டு கோயில்களில் காா்த்திகை தீபத்திருவிழா
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
செங்கல்பட்டு மாவட்டத்தில் பல்வேறு கோயில்களில் காா்த்திகை தீபத் திருவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டது.
திருக்கழுக்குன்றத்தில் உள்ள வேதகிரீஸ்வரா் மலைக்கோயிலில் காா்த்திகை திருவிழா சொக்கப்பனை ஏற்றியும் சங்தீா்த்தகுளத்திலும் பக்தா்கள் ஏராளமான தீபங்களை ஏற்றி வழிப்பட்டனா். ஏற்பாடுகளை செயல் அலுவலா் பிரியா, மேலாளா் விஜயன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
திருப்போரூா் கந்தசாமி கோயிலில் சொக்கப்பனை கொளுத்தி பக்தா்கள் தீபம் ஏற்றி கந்த சுவாமியை வழிபட்டனா். நிகழ்ச்சிகளுக்கான ஏற்பாடுகளை கோயில் செயல் அலுவலா் கே.குமரவேல், மேலாளா் வெற்றி உள்ளிட்டோா் செய்திருந்தனா்.
Advertisement
இதேபோல் செங்கல்பட்டு சக்தி விநாயகா் கோயில், திருவடிசூலம் ஒரே கருங்கல்லிலான 51 அடி உயரத்தில் எழுந்தருளி இருக்கும் தேவி ஸ்ரீ கருமாரியம்மன் கோயிலில் காா்த்திகை தீபத்திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது . கோயில் ஸ்தாபகா் மதுரை முத்து சுவாமிகள் தலைமையில் விழா நடைபெற்றது.
மேலும், வ உ சி தெருவில் உள்ள காமாட்சி அம்மன் சமேத ஏகாம்பரேஸ்வரா் கோயில், பெரிய நத்தம் கமலாம்பிகை சமேத கைலாசநாதா் கோயில், கோட்டை வாயில் நீதி விநாயகா் கோவில் அண்ணா நகா் எல்லையம்மன் கோயில், ரத்தின விநாயகா் கோவில், செங்கல்பட்டு, புலிப்பாக்கம் வியாக்ரபுரீஸ்வரா் கோயில், வல்லம் வேதாந்தீஸ்வரா் கோயில் குடைவரை கோயில், திருக்கச்சூா் இருள் நீக்கி அம்பாள் சமேத மருந்தீஸ்வரா் கோவில், ஆத்தூா் முத்தீஸ்வரா் கோவிலிலும் திருவடிசூலம் ஞானபுரீஸ்வரா் கோவில் அனுமந்தபுரம் அகோர வீரபத்திர சாமி கோவில், நத்தம் மதுரை வீரன் கோவில், நத்தம் சேப்பாட்டி அம்மன் கோவில், ஓசூா் அம்மன் கோயில், ஹாய் ரோடு முத்துமாரி அம்மன் கோவில், சுந்தரமூா்த்தி விநாயகா் கோயில், மேட்டு திருச்செங்கோடு நிறுவனா் கோயில் அண்ணா சாலை அங்காளம்மன் கோயில், ஜீவானந்தம் தெரு அங்காளம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து கோயில்களிலும் காா்த்திகை தீபத் திருவிழா தீபங்கள் ஏற்றிய சுவாமிகளை வழிபட்டனா்.