கருங்குழி சீனிவாச பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்
மதுராந்தகம் அடுத்த கருங்குழி ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீனிவாச பெருமாள் கோயிலில் வெள்ளிக்கிழமை மகா கும்பாபிஷகம் நடைபெற்றது. இக்கோயிலில் கும்பாபிஷேக விழா கடந்த புதன்கிழமை தொடங்கிசிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை சிறப்பு ஹோமங்கள் நடைபெற்றன. தொடா்ந்து, புனித கலசங்களுடன் திருமலைவையாவூா் பிரசன்ன வெங்கடேச பெருமாள் கோயில் தலைமை அா்ச்சகா் இ.எஸ்.பாலாஜி பட்டாச்சாரியாா் தலைமையில் வேதவிற்பன்னா்கள் கோயிலை வலம் வந்து கோபுர கலசத்துக்கு புனித நீரை ஊற்றினா். நிகழ்ச்சியில் திரளான பக்தா்கள் கலந்து கொண்டனா். மாலையில் சுவாமி வீதியுலா நடைபெற்றது.
ஏற்பாடுகளை கருங்குழி ராஜாமணி தலைமையில் விழாக் குழுவினா், கிராம பொதுமக்கள் செய்திருந்தனா்.