திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது DIN
செங்கல்பட்டு

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது!

செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

DIN

செங்கல்பட்டு: செங்கல்பட்டை அடுத்த திருப்போரூர் கந்தசாமி கோயில் மாசி பிரம்மோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது.

விண்ணிலிருந்து போர் புரிந்த இடமாக திகழும் திருப்போரூர் கந்தசாமி கோவிலில் ஆண்டுதோறும் 12 நாள்கள் நடைபெறும் மாசி மாத பிரம்மோற்சவம் இந்த ஆண்டு வெகு விமர்சையாக கொடியேற்றத்துடன் தொடங்கியது.

கொடியேற்றம்

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் கந்தசாமி கோயில் ஆழிசூழ் பூவுலகில் தர்மமிகு தொண்டை மண்டலத்தில் பழமையானதும் புராதான பெருமை கொண்டதும் யுத்தபுரி சமரபுரி சமரப்பதி எனும் காரணப்பெயர்களால் போற்றப்படுவதும் மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் முப் பெருமைகளை கொண்டதுமான திருப்போரூர் திருத்தலத்தில் வள்ளி தெய்வானை உடன் உரையாய் மூலிகைகளாலான செதுக்காத திருமேனியாய் சுயம்பு வடிவில் நின்ற கோலத்தில் நாடி வரும் பக்தர்களுக்கு வேண்டும் வரம் தரும் வள்ளலாய் திகழும் திருப்போரூர் கந்தசாமி கோவில் பிரமோற்சவம் வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. பிரம்மோற்சவ கொடியேற்ற விழாவையொட்டி முருகனுக்கு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் கொடிமரத்திற்கு சிறப்பு பூஜைகளும் நடைபெற்றது.

இதனை அடுத்து சிறப்பு அலங்காரத்தில் வள்ளி தெய்வானையுடன் முருகப் பெருமான் எழுந்தருளி கொடியேற்ற விழா நடைபெற்றது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

விழாவில் பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்தனர். பிப்ரவரி 14ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

முதல் நாள் வியாழக்கிழமை கொடியேற்றமும், இரவு கிளி வாகனம் உற்சவம். இரண்டாம் நாள் பகல் தொட்டி உற்சவம். இரவு பூத வாகன உற்சவம். மூன்றாம் நாள் புருஷா மிருகம் உபதேச உற்சவம். இரவு வெள்ளி அன்ன வாகனம் உற்சவம். நான்காம் நாள் பகல் ஆட்டு கிடா வாகன உற்சவம். இரவு வெள்ளி மயில்வாகனம் உற்சவம். ஐந்தாம் நாள் உற்சவம் பகல் மங்களகிரி உற்சவம். இரவு தங்கமயில் வாகனம் பஞ்சமூர்த்தி புறப்பாடு.

ஆறாம் நாள் பகல் தொட்டி உற்சவம் .இரவு யானை வாகன உற்சவம். ஏழாம் நாள் திருத்தேரோட்டம் ரத உற்சவமும். மங்களாசன உற்சவம். எட்டாம் நாள் காலை தொட்டி உற்சவம். இரவு குதிரை வாகனம் பதிவேட்டை .ஒன்பதாம் நாள் பகல் விமான உற்சவம் இரவு சிம்ம வாகனம் ஆறுமுகசுவாமி அபிஷேகம் மற்றும் உற்சவம் புறப்பாடு. பத்தாம் நாள் பகல் தொட்டி உற்சவம். நண்பகல் தீர்த்தவாரி. மாலை தெப்பல் உற்சவம் .இரவு குதிரை வாகன மத்தியில் அவரோகணம் மௌன உற்சவம் சண்டேஸ்வரர் உற்சவம்.

பதினோராம் நாள் மாலை கிரிவலம் உற்சவம். இரவு பந்தம் பரி உற்சவம். பன்னிரண்டாம் நாள் திருக்கல்யாண உற்சவம் நடைபெறுகிறது.

திருப்போரூர் கந்தசாமி கோயிலில் பிரம்மோற்சவம் தொடங்கியது

விழா நாள்களில் அன்றாட பகல் உற்சவம் இரவு உற்சவத்தில் முருகப்பெருமான் வெவ்வேறு வாகனத்தில் அலங்கரிக்கப்பட்டு உற்சவம் நடைபெறும். விழாவிற்கான ஏற்படுகளை திருக்கோயில் செயல் அலுவலர் குமரவேல் மேலாளர் வெற்றி கோயில் பணியாளர்கள், சிவாச்சாரியார்கள் ஊர் பொதுமக்கள் மற்றும் ஸ்ரீபாதம் தாங்கிகள் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் பேரவைத் தேர்தல் வெற்றி நிலவரம்!

“அரசு சரியாக, தீவிரமாக ஆய்வு செய்யவில்லை!” மேகதாது விவகாரம் பற்றி ஓபிஎஸ்!

காமாட்சி அம்மன் அவதார தினம்: கோயில் ஊழியா்கள் பால் குட ஊா்வலம்

‘பாலியல் ரீதியாக, தவறான எண்ணத்தில் யாரேனும் முயற்சித்தால் உடனே பெற்றோா், ஆசிரியா்களிடம் தெரிவிக்க வேண்டும்’

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் பட டிரைலர்!

SCROLL FOR NEXT