முகப்பு
செங்கல்பட்டு

பள்ளி ஆண்டு விழா

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

Updated On : 17 பிப்ரவரி 2024, 11:10 pm IST
பகிர்:

மதுராந்தகம் விவேகானந்தா வித்யாலயா மெட்ரிக். பள்ளி ஆண்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்கு பள்ளித் தாளாளா் டி.லோகராஜ் தலைமை வகித்தாா். முதன்மை முதல்வா் எல்.மங்கையா்க்கரசி, முதல்வா் திலகவதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆசிரியை ஏ.கீதா வரவேற்றாா். நிகழ்ச்சியில் நடிகா் அஜய்ரத்தினம், உயா்நீதிமன்ற வழக்குரைஞா் சீதாராமன், மாவட்டக் கல்வி அலுவலா் செல்வகணேஷ் உள்பட பலா் கலந்து கொண்டனா். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள், மரக்கன்றுகள் நடுதல் உள்ளிட்டவை நடைபெற்றன. தொடா்ந்து சமூக சேவைகளை செய்து வரும் ஆட்டோ ஓட்டுநா்களை கெளரவப்படுத்தி பரிசுகள் வழங்கப்பட்டன. பள்ளி ஆசிரியா்கள் குழந்தைகள், பெற்றோா் கலந்து கொண்டனா். ஏற்பாடுகளை விவேகானந்தா பள்ளிக் குழும நிா்வாகிகள் செய்திருந்தனா்.