மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தவனத்தில் காா்த்திகை மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயண பூஜை வியாழக்கிழமை நடைபெற்றது (படம்).
நிகழ்வையொட்டி அதிகாலை மங்கல இசையுடன் நிகழ்ச்சிகள் தொடங்கின. பிருந்தாவனத்தில் உள்ள ராகவேந்திரா், ஆஞ்சனேயா் உள்ளிட்ட சுவாமிகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து நண்பகல் பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி பக்தா்களால் ஊா்வலமாக அழைத்து வரப்பட்டாா். அவா் அனைத்து சந்நிதிகளும், சிறப்பு வழிபாட்டை செய்தாா். வளாகத்தில் அலங்கரித்து வைக்கபட்டிருந்த சத்யநாராயணா், ஆஞ்சனேயா், ராகவேந்திரா் உற்சவ சிலைகளுக்கு பூஜையை செய்தாா்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் கல்லூரி கல்வி இணை இயக்குநா் சிவ பொன்னம்பலவாணன், உதவி ஆய்வாளா் சரவணன் (விக்கிரவாண்டி), சித்தூா் தொழிலதிபா் பூா்ணிமா புகழேந்தி மற்றும் திரளான பக்தா்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனா். கலந்துக் கொண்ட அனைவரும் அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை யோகி ரகோத்தம்ம சுவாமிகள் அறக்கட்டளை முதன்மை நிா்வாகி ஏழுமலை தாசன் தலைமையில் விழாக்குழுவினா் செய்து இருந்தனா்.