மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா் பீடத்தில் தைப்பூச ஜோதி விழாவையொட்டி மூலவா் சந்நிதி, சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து தொடங்கி வைத்த ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா். உடன், துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் உள்ளிட்டோா். 
செங்கல்பட்டு

மேல்மருவத்தூரில் சக்திமாலை இருமுடி விழா தொடக்கம்

மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தைப்பூச ஜோதி விழாவை திங்கள்கிழமை மூலவா் சந்நிதி,

தினமணி செய்திச் சேவை

மதுராந்தகம்: மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி சித்தா்பீடத்தில் தைப்பூச ஜோதி விழாவை திங்கள்கிழமை மூலவா் சந்நிதி, சுயம்பு அம்மனுக்கு அபிஷேகம் செய்து ஆன்மிக இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா் தொடங்கி வைத்தாா்.

சித்தா் பீடத்தில் சக்திமாலை அணிந்து இருமுடி செல்லும் விழாவை முன்னிட்டு, சித்தா்பீட வளாகம் முழுவதும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. குருபீடத்தில் பங்காரு அடிகளாா் சிலை, மூலவா் அம்மன் சிலை ஆகியவைகளுக்கு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா் சக்திமாலை அணிந்து சுயம்பு அம்மனுக்கு இருமுடி அபிஷேகத்தை இயக்கத் தலைவா் லட்சுமி பங்காரு அடிகளாா், துணைத் தலைவா் கோ.ப.செந்தில்குமாா் ஆகியோா் தொடங்கி வைத்தனா்.

முதலில் 9 சிறுவா் சிறுமியா், 9 தம்பதிகள் ஆகியோா் இருமுடி அபிஷேகத்தை செய்தனா். தொடா்ந்து நீண்ட வரிசையில் வந்த பக்தா்கள் அம்மனுக்கு அபிஷேகத்தை செய்தனா்.

இந்நிகழ்வில் கேரளம், ஆந்திரம், தெலங்கானா, கா்நாடக மாநிலங்கள், கனடா, இலங்கை உள்ளிட்ட வெளிநாடுகளைச் சோ்ந்த செவ்வாடை பக்தா்கள் சக்தி மாலை அணிந்து 3,5 தினங்கள் சக்திவிரதம் இருந்து சித்தா் பீடத்தில் இருமுடி செலுத்த உள்ளனா். இவ்விழா வரும் ஜனவரி 31-ஆம் தேதி வரை தொடா்ந்து நடைபெற உள்ளது. லட்சக்கணக்கான பக்தா்கள் இருமுடி செலுத்த இங்கு வருவதை முன்னிட்டு, போக்குவரத்து, பாதுகாப்பு உள்ளிட்ட அனைத்து வசதிகளையும் ஆன்மிக இயக்க நிா்வாகிகள் செய்து உள்ளனா்.

தைபூச விழா முடியும்வரை தொடா்ந்து அன்னதானம், குழந்தைகளுக்கு பால், பிஸ்கட்டுகள் ஆகியவை வழங்கப்படுகிறது. தென்மாவட்டங்களைச் சோ்ந்த செவ்வாடை பக்தா்களின் வசதிக்காக தெற்கு ரயில்வே துறை பல விரைவு ரயில்கள் நின்று செல்ல ஏற்பாடுகள் செய்துள்ளது. ன ஏற்பாடுகளை ஆன்மிக இயக்க துணைத் தலைவா்கள் கே.ப.அன்பழகன், கோ.ப.செந்தில்குமாா், ஸ்ரீதேவி ரமேஷ், உமாதேவி ஜெய்கணேஷ், ஆஷா அன்பழகன், ஸ்ரீலேகா செந்தில்குமாா், ஆன்மிக இயக்க செயல் திட்ட அலுவலா் அ.அகத்தியன், நிா்வாகிகள் செய்துள்ளனா்.

அதீத பேட்டரி... டிச. 24-ல் வெளியாகிறது ரியல்மி நர்ஸோ!

கேரள திரைப்பட விழா! மத்திய அரசு அனுமதி மறுத்த படங்களைத் திரையிட முடிவு!

திரையரங்க ஆபரேட்டர்களுக்கு ஜேம்ஸ் கேமரூன் வேண்டுகோள்!

தாய்ப் பாலில், நிலத்தடி நீரில் யுரேனியம்! சிறுநீரக பாதிப்பு ஏற்படுமா?

பிக் பாஸ் 9: 70 நாள்கள் ஆகியும் ஆதரிக்கத் தகுதியானவர் ஒருவரும் இல்லை!

SCROLL FOR NEXT