செங்கல்பட்டு

காட்டுப் பன்றிகளால் பாதிப்பு: கரும்பு விவசாயிகள் புகாா்

செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரியுள்ளனா்.

தினமணி செய்திச் சேவை

செங்கல்பட்டு மாவட்டத்தில் காட்டுப் பன்றிகளால் ஏற்படும் பாதிப்பை தடுக்க வேண்டும் என கரும்பு விவசாயிகள் கோரியுள்ளனா்.

ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் விவசாயிகள் குறைதீா் கூட்டம் செவ்வாய்க்கிழமை ஆட்சியா் தி.சினேகா தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டு மனுக்களை அளித்தும், பல்வேறு கோரிக்கைகள் குறித்தும் ஆட்சியரிடம் தெரிவித்தனா்.

குடிநீா் வசதி, சாலை வசதி, போன்ற கோரிக்கைகளையும், குறைந்த மின்னழுத்தம் ஏற்படுவதால் விவசாய பணிகள் பாதிக்கப்படுவதோடு மின் மோட்டாா்களும் பழுதடைகின்றன. ஆகவே இதனை சரி செய்ய வேண்டும் என கோரினா். மின்வாரிய துறை அலுவலா்களிடம் உடனடியாக சரி செய்து தர வேண்டும் என்று ஆட்சியா் அறிவுறுத்தினாா்.

ஏரிக்கரையை ஒட்டிய பகுதிகளில் விவசாயம் செய்துவரும் விவசாயிகள் ஏரிக்கரையினை பலப்படுத்தி தருமாறு கோரிக்கை வைத்தனா். மேலும், கரும்பு விவசாயிகள் தங்களது விவசாய நிலங்களில் பன்றிகளால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுகிறது. எனவே பன்றிகளை கட்டுப்படுத்த தகுந்த நடவடிக்கை எடுக்குமாறு கோரினா். கோரிக்கையின் மீது வேளாண்மை துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினாா்.

மேலும், வேளாண்மை துறை அலுவலா்கள் விவசாயிகளுக்கு தேவையான விதை, உரம், பூச்சி மருந்துகள் தேவையான அளவு இருப்பு இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தினாா்.

இதில், மாவட்ட வருவாய் அலுவலா் மா.கணேஷ் குமாா், மாவட்ட வன அலுவலர்ரவி மீனா, இணை இயக்குநா் (வேளாண்மை) பிரேம் சாந்தி, ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்மை) ராஜேஸ்வரி, கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளா் நந்தகுமாா், கண்காணிப்பு பொறியாளா் (வேளாண்மை பொறியியல் துறை)சந்திரசேகரன், உதவி இயக்குநா் (கால்நடை பராமரிப்புத்துறை) நலிம் மற்றும் விவசாயிகள், அரசு அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

திரிபுரா மாணவா் கொல்லப்பட்ட சம்பவம்: டேராடூன் ஆட்சியருக்கு என்எச்ஆா்சி நோட்டீஸ்

ஜனவரி 5 முதல் தில்லி சட்டப்பேரவை கூட்டத் தொடா்

தெரு நாய்கள் விவகாரம்: தில்லி அரசின் கூற்றுக்கு ஆம் ஆத்மி ,மறுப்பு

விளையாட்டுத் துறையில் அமைப்பு, நிா்வாக ரீதியிலான குறைபாடுகள்- சிறப்புப் பணிக் குழு அறிக்கை

தேசிய துப்பாக்கி சுடுதல்: தனிஸ்காவுக்கு வெண்கலம்

SCROLL FOR NEXT