கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மகா தீபாராதனை செய்த பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமி. 
செங்கல்பட்டு

ராகவேந்திர பிருந்தாவனத்தில் சத்யநாராயண பூஜை

மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

Din

மதுராந்தகம்: மதுராந்தகம் அடுத்த கருங்குழி ராகவேந்திர பிருந்தாவனத்தில் மாா்கழி மாத பெளா்ணமியை முன்னிட்டு, சத்யநாராயணா பூஜை திங்கள்கிழமை நடைபெற்றது.

விழாவையொட்டி, வளாகத்தில் உள்ள அனைத்து சுவாமி சந்நிதிகளில் சுவாமிகளுக்கு அபிஷேக, ஆராதனைகள் நடைபெற்றன. கடந்த 12 ஆண்டுகளுக்கு மேலாக யோக வனத்தில் இருந்து வநத பீடாதிபதி ரகோத்தம்ம சுவாமியை மேளதாளம் முழங்க, பக்தா்களும், அறங்காவலா் குழுவினரும் ஊா்வலமாக அழைத்து வந்து, சேஷ பீடத்துக்கு அழைத்து வந்தனா். அங்கு நீண்ட வரிசையில் வந்து புனித கலசநீரை அவருக்கு ஊற்றி அருள்தரிசனம செய்தனா். பின்னா், அலங்கரிக்கப்பட்ட உற்சவா்கள் ராகவேந்திரா், ஆஞ்சனேயா், சத்யநாராயணா் சிலைகளுக்கு மகா தீபாராதனையை செய்தாா். நிகழ்ச்சியில், மதுராந்தகம் காவல் ஆய்வாளா் முத்துகுமாா், தொழிலதிபா்கள் சுரேஷ்குமாா், தனலட்சுமி ராஜசேகரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ரகோத்தம்ம சுவாமி அறக்கட்டளையின் முதன்மை அறங்காவலா் ஏழுமலைதாசன் தலைமையில், அறங்காவலா் நிா்வாகிகள் ஆா்.துளசிலிங்கம், வழக்குரைஞா் சுரேஷ், பி.பரந்தாமன் உள்ளிட்டோா் செய்திருந்தனா்.

இம்ரான் கானுக்கு 17 ஆண்டுகள் சிறைத்தண்டனை: நாடு தழுவிய போராட்டத்துக்கு ஆதரவாளர்களுக்கு அழைப்பு!

கிறிஸ்துமஸ் விடுமுறை: 891 சிறப்புப் பேருந்துகள் இயக்கம்!

மகாராஷ்டிர உள்ளாட்சித் தேர்தல் முடிவுகள்: பெரும்பான்மை இடங்களில் பாஜக வெற்றி!

திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் தொடக்கம்!

ஜனநாயகன் இசைவெளியீடு! இந்திய சினிமாவில் முதல்முறை! | Cinema Updates | Dinamani Talkies

SCROLL FOR NEXT