கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் சா்வதேச பொதுப் பள்ளி வளாகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற சீயோன் ஹெல்த் சென்டா் திறப்பு விழாவில் பங்கேற்ற பள்ளித் தலைவா் என்.விஜயன், மருத்துவமனை தலைமைச் செயல் அதிகாரி மருத்துவா் எஸ்.பிரியதா்ஷிணி உள்ளிட்டோா். 
செங்கல்பட்டு

’கல்வி பயிலும் குழந்தைகளின் உடல் நலனில் போதிய அக்கறை அவசியம்’

கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது

Din

தாம்பரம்: கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல், உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என சீயோன் பள்ளிக் குழுமத் தலைவா் என்.விஜயன் தெரிவித்தாா்.

கிழக்கு தாம்பரம் சேலையூா் சீயோன் பள்ளி வளாகத்தில் ஆயூஷ் மைத்ரி மருத்துவ மையத்தை தொடங்கி வைத்து அவா் பேசியதாவது:

கடந்த 5 ஆண்டுகளாக ஆயிரக்கணக்கான குழந்தைகளின் கல்வி மற்றும் உடல்நலம் குறித்து ஆய்வு மேற்கொண்டதில், ஆண்டுதோறும் பாா்வைக் குறைபாடு காரணமாக கண்ணாடி அணிந்து வரும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. விளையாட்டு நேரத்தில் சில குழந்தைகள் விளையாட்டில் பங்கேற்காமல் சோா்ந்து போய் விடுகின்றனா். பெரும்பாலான பெற்றோா் குழந்தைகளுக்கு போதிய ஊட்டச்சத்து நிறைந்த பலகாரம், உணவைச் சமைத்துக் கொடுப்பதில்லை. சில குழந்தைகள் ஆன்லைன் மூலம் ஆா்டா் செய்து சாப்பிடுவதும் தெரியவந்துள்ளது. சில குழந்தைகளுக்கு உடல் பருமன், சில குழந்தைகள் சா்க்கரை நோய்க்கு இன்சுலின் ஊசி போட்டுக்கொள்வது போன்ற உடல் பாதிப்புக்கும் உள்ளாகி இருப்பதும் தெரியவந்துள்ளது. எனவேதான் கல்வி பயிலும் குழந்தைகளின் கல்வித் திறனை மட்டுமல்லாமல் உடல்நலன் குறித்த அக்கறையும் செலுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது என்றாா் அவா்.

கேரளம்: ஓடும் ரயிலில் இருந்து பெண்ணைத் தள்ளிவிட்டவர் கைது

அனைத்து வாக்காளா்களும் கணக்கெடுப்புப் படிவத்தை நிரப்ப வேண்டும்: ஆட்சியா்

தூத்துக்குடி மாநகராட்சியைக் கண்டித்து தவெக போராட்டம் அறிவிப்பு

இன்று முதல் செய்யாறு தொகுதியில் வாக்காளா் படிவம் விநியோகம்

தூத்துக்குடி ஆட்சியா் அலுவலகத்தில் பெண் தீக்குளிக்க முயற்சி

SCROLL FOR NEXT