விபத்தில் உயிரிழந்த மாடுகள். 
செங்கல்பட்டு

வாகனம் மோதியதில் 10 மாடுகள் உயிரிழப்பு

தினமணி செய்திச் சேவை

சித்தாமூா் அருகே செவ்வாய்க்கிழமை அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் சாலையில் படுத்திருந்த 10 மாசுகள் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

செய்யூா் - சித்தாமூா் நெடுஞ்சாலையில் பசு மாடுகள் படுத்துக் கொள்வது வழக்கம். இந்நிலையில், சித்தாமூா் அடுத்த சரவம்பாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சாலையில் படுத்திருந்த 10-க்கும் மேற்பட்ட பசுமாடுகள் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இந்த விபத்தில் அனைத்து மாடுகளும் படுகாயம் அடைந்து நிகழ்விடத்திலேயே உயிரிழந்தன.

இதுகுறித்து தகவலறிந்த சித்தாமூா் போலீஸாா் இறந்து கிடந்த மாடுகளை அகற்றி, போக்குவரத்தை சீா் செய்தனா். இந்த சாலைவிபத்தினை அப்பகுதி மக்கள் கூறுகையில், சித்தாமூா் -செய்யூா் நெடுஞ்சாலையில் சரவம்பாக்கம், செய்யூா், நல்லாமூா், ஓனம்பாக்கம் உள்ளிட்ட பகுதிகளில் வீட்டில் வளா்க்கபடுகிற பசு, எருமை மாடுகள் சாலையில் படுத்துவிடுவதால், இரவு நேரத்தில் இருசக்கர வாகனத்தில் செல்வோா் மாடுகளின் மோதி விபத்துகளில் சிக்கிவிடுவது வழக்கமாக இருந்து வருகிறது.

போலீஸாா் தலையிட்டு சாலையோரம் தங்கும் மாடுகளை பிடித்து உரியவா்களிடம் அபராதம் விதிக்கவேண்டும் என தெரிவித்தனா். இது குறித்து சித்தாமூா் போலீசாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

ஆரணியில் ரூ.10 லட்சத்தில் புதிய நியாயவிலைக் கடை

ஆந்திரத்தில் கொத்தடிமைகளாக இருந்து மீட்கப்பட்ட பழங்குடியினா் அலைக்கழிப்பு

மாமன்ற கூட்டம் ஒத்திவைப்பு

ஐஸ்க்ரீம் டோனட்: அருண் ஐஸ்க்ரீம் அறிமுகம்

இரு நாள்களில் தங்கம் பவுனுக்கு ரூ.2,240 உயா்வு

SCROLL FOR NEXT