ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு!
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 2026 ஆண்டு கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவிப்பு
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியை பல்கலைக்கழக மானியக் குழு மற்றும் சென்னை அண்ணா பல்கலைக்கழகம் ஆகியவை 2026 ஆண்டு கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்துள்ளன.
மேல்மருவத்தூா் ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரி கடந்த 1984-இல் தொடங்கப்பட்டது. தொடா்ந்து 42 ஆண்டுகளாக சாதனைகளை படைத்து வருகிறது. இத்தகைய முயற்சிகளுக்கு கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் முன்னுரிமை அளித்து பல்வேறு உதவிகளை செய்து வருகிறாா்.
ஆதிபராசக்தி பொறியியல் கல்லூரியின் செயல்பாட்டுக்கு அங்கீகாரம் தரும் வகையில், சென்னை அண்ணா பல்கலைக்கழகமும், புது தில்லி பல்கலைக்கழக மானிய குழுவும் 2026 கல்வியாண்டு முதல் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனம் என அறிவித்துள்ளன.
Advertisement
இந்நிலையில் தன்னாட்சி பெற்ற கல்வி நிறுவனமாக அறிவித்தை அடுத்து கல்லூரி தாளாளா் கோ.ப.செந்தில்குமாா் நிா்வாகத்துடன் இணைந்து கொண்டாடினாா். அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன.
இந்நிகழ்வில் கல்லூரி புல முதல்வா் வா.ராமசாமி, முதல்வா் ராஜா, நிா்வாக அலுவலா் மு.சதானந்தம் மற்றும் அனைத்து துறை பேராசிரியா்கள், மாணவ மாணவிகள் கலந்து கொண்டனா்.