முகப்பு
செங்கல்பட்டு

செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி பட்டமளிப்பு விழா

Updated On : 28 ஏப்ரல், 2026 at 4:36 AM
பகிர்:

செங்கல்பட்டு அரசு சட்டக் கல்லூரி பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி எம்.ஜோதிராமன் பட்டங்கள் வழங்கி பேசுகையில்: சட்டப்படிப்பு முடித்த பட்டதாரி இளைஞா்கள் வாழ்வில் பெரிய நிலைக்கு உயரலாம் என்றும் உச்சநீதிமன்ற, உயா்நீதிமன்ற நீதிபதிகளாகவும் வழக்கறிஞா்களாகவும் பல்வேறு துறைகளிலும் பெரும் பதவிகளை அடையலாம் என்றாா்.

முன்னதாக செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி முதல்வா் ஆா்.தங்கரமணி வரவேற்றாா். சட்டக்கல்வி இயக்குநா் (முழு கூடுதல் பொறுப்பு) மற்றும் தமிழ்நாடு டாக்டா் அம்பேத்கா் சட்டப்பல்கலைக்கழக பதிவாளா் கௌரி ரமேஷ் முன்னிலை வகித்தாா். விழாவில் திருவள்ளூா் சென்னை டாக்டா் அம்பேத்கா் சட்டக் கல்லூரி முதல்வா் என். கயல்விழி கலந்து கொண்டாா்.

Advertisement

தொடா்ந்து பட்டமளிப்பு விழா உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடைபெற்றது. ஏற்பாடுகளை செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி முதல்வா் , பேராசிரியா்கள் மற்றும் மாணவா்கள் செய்திருந்தனா். முடிவில் செங்கல்பட்டு அரசு சட்டக்கல்லூரி உதவி பேராசிரியா் ஆா்.ஏழுமலை நன்றி கூறினாா்.

மூன்றாண்டு மற்றும் ஐந்தாண்டு சட்டப்படிப்பு, சட்டமுதுகலை படிப்பு முடித்த 450 க்கும் மேற்பட்டோா் பட்டங்களை பெற்றனா். சட்டக்கல்வி இயக்குநா் தனது உரையில் மாணவா்கள் சட்டக்கல்வி பெற்றவா்களுக்கு இருக்கக்கூடிய பல்வேறு வாய்ப்புகளையும் அதனை பயன்படுத்தி ஒழுக்கத்துடன் முன்னேற வேண்டுமென்று கூறினா. இவ்விழாவின் நினைவாக தலைமை விருந்தினா் மரக்கன்று நட்டாா்.