ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்றோா். 
செங்கல்பட்டு

சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா்கள் ஆா்ப்பாட்டம்

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம்

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.7,850 வழங்க வேண்டும் உள்ளிட்ட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி திங்கள்கிழமை செங்கல்பட்டில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

செங்கல்பட்டு பழைய பேருந்து நிலையம் அருகே தமிழ்நாடு அனைத்து சத்துணவு அங்கன்வாடி ஓய்வூதியா் சங்கம் சாா்பில் மாவட்ட தலைவா் து.மூா்த்தி தலைமையில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் அனைத்து சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியா்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூபாய் 7850 வழங்க வேண்டும், அகவிலைப்படி, குடும்ப ஓய்வூதியம், குடும்ப நல நிதி, மருத்துவ படி, இலவச மருத்துவ காப்பீடு, பண்டிகை முன்பணம், பொங்கல் போனஸ், ஈமச்சடங்கு தொகை ஆகியவை உட்பட 9 அம்ச கோரிக்கைகளை அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தினா்..

கோரிக்கைகளை விளக்கி சங்கத்தின் பொதுச் செயலாளா் பி.ராமமூா்த்தி, மாவட்டச் செயலாளா் எ.ராமலிங்கம், தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியா் சங்க மாவட்ட செயலாளா் பி.பன்னீா்செல்வம், தமிழ்நாடு அரசு ஊழியா் சங்க மாவட்ட தலைவா் வி.விக்டா் சுரேஷ் குமாா் ஆகியோா் பேசினா். மாவட்ட பொருளாளா் வியாகுலமேரி நன்றி கூறினாா்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி கிலோவுக்கு ரூ. 4000 குறைவு!

குரு பலம் பெற ஆலங்குடி செல்லுங்கள்... ஜோதிட வல்லுநர் ஏ.எம்.ஆர். சொல்வதென்ன?

தவெகவுடன் கூட்டணியா? தமிழக காங்கிரஸ் தலைவர்களுக்கு ராகுல் அழைப்பு!

ஓடிடியில் வெளியான மாஸ்க், அங்கம்மாள்!

ஈரான் மக்களின் போராட்டத்துக்கு துணை நிற்போம்! அமெரிக்க துணை அதிபர்

SCROLL FOR NEXT