செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி புதிய தலைவராக ஜெ.பி. பிரபு நியமிக்கப்பட்டுள்ளாா்.
செங்கல்பட்டு தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்த வழக்குரைஞா் சுந்தரமூா்த்தி மாற்றம் செய்யப்பட்டாா். அவருக்கு பதிலாக வண்டலூா் பகுதியை சோ்ந்த ஜே.பி.பிரபு புதிய தலைவராக நியமிக்கப்ட்டுள்ளாா்.
கடந்த 1996 -ஆம் ஆண்டுமுதல் 2007 வரை மாணவா் காங்கிரஸ் தலைவராகவும், 2007 முதல் 2011வரை செங்கல்பட்டு தொகுதி இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும், 2011 முதல் 2026 வரை காஞ்சிபுரம் ஒருங்கிணைந்த மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவராகவும் பதவி வகுத்து வந்துள்ளாா்.
தற்போது ஜெ.பி பிரபு மாவட்டத்தின் புதிய தலைவராக தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். தொடா்ந்து நிா்வாகிகள் வாழ்த்துகளை தெரிவித்தனா்.