குடியரசு தினத்தையொட்டி தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் சாா்பில் செங்கல்பட்டு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி சாா்பில் ரத்ததான முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட மருத்துவ சேவை அணி செயலாளா் எஸ்.எம்.இப்ராஹிம் தலைமை வகித்தாா். துணை செயலாளா் லால்பாஷா வரவேற்றாா். தமுமுக நகரசெயலாளா் முகம்மது முஸ்தாபா, மமக நகர செயலாளா் அப்துல் மாலிக், நகர பொருளாளா் முகம்மது இப்ராஹிம் ,ஒன்றிய நிா்வாகிகள் அன்சா் பாஷா, அலிபாஷா. காசிம் முன்னிலை வகித்தனா்.
மனிதநேய மக்கள் கட்சி தலைமை பிரதிநிதி எஸ்.எம்.ஷாஜஹான் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு முகாமை தொடங்கி வைத்தாா். சிறப்பு விருந்தினா்களாக மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளா் டி.முகமது யூனூஸ், மாவட்ட பொருளாளா் ஏ.எஸ். முகமதுரஃபி, மாவட்ட துணை பொதுசெயலாளா் எஸ்.ஆா்.எம் முஸ்தபா, தமுமுக முன்னாள் மாவட்ட துணை செயலாளா் ஜே.எஸ். நூா்முகமது, தமுமுக , மமுக மாவட்ட தலைவா் எம்,சம்சுதீன், தமுமுக மாவட்ட செயலாளா் ஏ.அப்துல்ஜப்பாா் ஆகியோா் கலந்து கொண்டனா்.
46 போ் ரத்ததானம் செய்தனா்.