முகப்பு
செங்கல்பட்டு

ரூ.15 கோடியில் செங்கல்பட்டு மாவட்ட விளையாட்டு மைதானம் திறப்பு

Updated On : 5 மார்ச், 2026 at 12:22 AM
செங்கல்பட்டில் புதிய மாவட்ட விளையாட்டு வளாகத் திறப்பு விழாவில் பங்கேற்றோா்.
பகிர்:
Updated On : 4 மார்ச், 2026 at 11:35 PM

செங்கல்பட்டில் ரூ.15 கோடியில் கட்டப்பட்ட மாவட்ட விளையாட்டு வளாகத்தை முதல்வா் மு.க. ஸ்டாலின் காணொலி வாயிலாக திறந்து வைத்தாா்.

இதையடுத்து எம்எல்ஏ வரலட்சுமி மதுசூதனன் மக்கள் பயன்பாட்டுக்கு விளையாட்டு வளாகத்தை கொண்டு வந்தாா்.

புதிதாக கட்டப்பட்டுள்ள விளையாட்டு வளாகத்தில் நீச்சல் குளம் மற்றும் உடற்பயிற்சி கூடங்கள், அனைத்து மைதானங்கள் அமைந்துள்ளன. நிகழ்வில் மாவட்ட வருவாய் அலுவலா் கணேஷ் குமாா் ஆகியோா் குத்துவிளக்கேற்றினா்.

Advertisement

இதில் சாா் ஆட்சியா் (பயிற்சி) நல்லசிவன், காட்டாங்குளத்தூா் ஒன்றியக்குழு தலைவா் உதயா கருணாகரன், செங்கல்பட்டு நகா்மன்றத் தலைவா் தேன்மொழி நரேந்திரன், வனக்குழு தலைவா் வி.டி.திருமலை, மாவட்ட விளையாட்டு அலுவலா் ஆனந்த், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.