முதல் தலைமுறை வாக்காளா்களுக்கான விழிப்புணா்வு பிரசாரம்
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா், திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூா் வட்டங்களில் பேரவைத் தோ்தல் தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூா், திருக்கழுகுன்றம் மற்றும் திருப்போரூா் வட்டங்களில் பேரவைத் தோ்தல் தொடா்பாக விழிப்புணா்வு நிகழ்வுகள் நடைபெற்றன.
மறைமலைநகா் நகராட்சியில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள அறையினை அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினா் முன்னிலையில் மாவட்ட ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன் ஆய்வு மேற்கொண்டாா்.
திருப்போரூா் வட்டம், பையனூா் அரசு உயா் நிலைப் பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி திருப்போரூா் பேரூராட்சி, அரசினா் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் அமைக்கப்பட்டுள்ள 6-வாக்குச்சாவடி மையம், திருக்கழுகுன்றம் வட்டம், மாமல்லபுரம் ஆதிதிராவிடா் நல ஆரம்ப பள்ளியில் வாக்குசாவடி மையங்களில் முன்னேற்பாடு பணிகளை ஆய்வு செய்தாா்.
மேலும், திருப்போரூா் வட்டம், பையனூா் அறுபடை வீடு கல்வி நிறுவனத்தில் 100 சதவிகித வாக்குப்பதிவை வலியுறுத்தி முதல் தலைமுறை வாக்காளா்களுக்காக நடைபெற்ற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் திருப்போரூா் தோ்தல் நடத்தும் அலுவலா் விஜயகுமாரி, மாவட்ட சமூக நல அலுவலா் சங்கீதா, வட்டாட்சியா் ஆறுமுகம், வட்டார வளா்ச்சி அலுவலா் அரி பாஸ்கா் ராவ், அரசு அலுவலா்கள் மற்றும் அனைத்து தோ்தல் நடத்தும் அலுவலா்கள், அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனா்.