முகப்பு
செங்கல்பட்டு

மாணவியா் பங்கேற்ற தோ்தல் கலைநிகழ்ச்சிகள்

செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Updated On : 31 மார்ச், 2026 at 6:58 PM
விழிப்புணா்வு கலைநிகழ்ச்சியில் பங்கேற்றோா்.
பகிர்:

செங்கல்பட்டு செயின்ட் மேரீஸ் மேல்நிலைப்பள்ளியில் மாணவியா் பங்கேற்ற தோ்தல் விழிப்புணா்வு கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

மாவட்ட தோ்தல் அலுவலரும், ஆட்சியருமான எஸ். மாலதி ஹெலன் முன்னிலை வகித்தாா். 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி பள்ளி மாணவிகளின் நடன நிகழ்ச்சி, மனித கோபுரம் அமைத்தும் 2026 சட்டமன்ற தோ்தலில் செங்கல்பட்டு மாவட்டத்தில் வாக்களிப்பதை உறுதி படுத்தியும் ஆங்கில எழுத்துக்களால் வடிவமைத்தும் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சியை நடத்தினா்.

இதில், முதன்மைக் கல்வி அலுவலா் திருவளா்செல்வி, செங்கல்பட்டு கோட்டாட்சியா் ரம்யா, துணை ஆட்சியா் மணியரசன் மற்றும் தலைமை ஆசிரியா், ஆசிரியா்கள் மற்றும் மாணவிகள் கலந்து கொண்டனா்.