முகப்பு
சென்னை

ரூ.32 லட்சம் தந்தால்தான் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்

திருவொற்றியூர், ஜூலை 15:   ரூ.32 லட்சம் தந்தால்தான் இலங்கைத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்ய முடியும் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.   இலங்கையில் போரி

சென்னை

ரூ.32 லட்சம் தந்தால்தான் தமிழர்களுக்கு நிவாரணப் பொருள்கள் விநியோகம்

திருவொற்றியூர், ஜூலை 15:   ரூ.32 லட்சம் தந்தால்தான் இலங்கைத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்ய முடியும் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.   இலங்கையில் போரி

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:44 PM
பகிர்:

திருவொற்றியூர், ஜூலை 15:   ரூ.32 லட்சம் தந்தால்தான் இலங்கைத் தமிழர்களுக்காக அனுப்பப்பட்ட நிவாரணப் பொருள்களை விநியோகம் செய்ய முடியும் என்று இலங்கை செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது.

  இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக சுமார் 884 டன் நிவாரணப் பொருள்களை லண்டனைச் சேர்ந்த மெர்சி மிஷன் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் அனுப்பி உதவியது.

  நிவாரணப் பொருள்களை ஏற்றிவந்த 'வணங்காமண்' என பெயரிடப்பட்ட 'கேப்டன் அலி' என்ற கப்பலை இலங்கை ராணுவம் அந்நாட்டிற்குள் அனுமதிக்க மறுத்து ஜூன் 7-ம் தேதி கப்பலை நடுக்கடலிலேயே திருப்பி அனுப்பியது. இதைத் தொடர்ந்து இக்கப்பல் ஜூன் 14-ல் இந்தியா வந்தடைந்தது.

  வேறு கப்பலில் நிவாரணப் பொருள்கள்: நிவாரணப் பொருள்களை செஞ்சிலுவை சங்கம் மூலம் வழங்க இலங்கை அரசு ஒப்புக்கொண்டது. இதையடுத்து 'கேப்டன் அலி' கப்பல், சென்னை துறைமுகத்துக்குள் அனுமதிக்கப்பட்டது. பின்னர் நிவாரணப் பொருள்கள் "கேப் கொலரடோ' கப்பலில் மாற்றப்பட்டு கடந்த ஜூலை 6-ம் தேதி இலங்கைக்கு அனுப்பப்பட்டது. ஆனால் 'கேப் கொலரடோ' கப்பலை இலங்கை கடல் எல்லையில் இலங்கை ராணுவம் தடுத்து நிறுத்தியது. பின்னர் பல்வேறு தரப்பினரின் வற்புறுத்தலை அடுத்து நிவாரணப் பொருள்களை அனுமதிக்க இலங்கை சம்மதித்தது.

  மீண்டும் சிக்கல்: இதைத் தொடர்ந்து நிவாரணப் பொருள்கள் கொழும்பு துறைமுகத்தில் இறக்கி வைக்கப்பட்டன. இந்நிலையில் ரூ.32 லட்சம் (சுமார் 66,000 அமெரிக்க டாலர்கள்) பணம் அனுப்பினால் மட்டுமே நிவாரணப் பொருள்களை விநியோகிக்க முடியும் என இலங்கை செஞ்சிலுவை சங்கம் கடிதம் அனுப்பி உள்ளது. இதனால் பொருள்களை விநியோகிப்பதில் மீண்டும் சிக்கல் எழுந்துள்ளது.

  இது குறித்து 'மனிதம்' தன்னார்வ தொண்டு நிறுவனத்தின் செயல் இயக்குநர் அக்னி சுப்பிரமணியம் கூறியது:

  லண்டன் கருணைத் தூதுவன் அமைப்பின் பிரதிநிதியாக நாங்கள் செயல்பட்டு வருகிறோம். இந்திய, இலங்கை அரசுகளின் ஒப்புதலின் பேரில்தான் சென்னையிலிருந்து மாற்று கப்பலில் நிவாரணப் பொருள்களை அனுப்பி வைத்தோம். சென்னையிலிருந்து கொழும்புவரை கொண்டு செல்ல சுமார் ரூ.15 லட்சம் செலவு செய்து விட்டோம். இலங்கை செஞ்சிலுவை சங்கம் வசம் ஒப்படைக்கப்பட்ட பின்னரும் அவற்றை விநியோகம் செய்ய ரூ.32 லட்சம் அனுப்ப வேண்டும். இல்லையெனில் கொழும்புத் துறைமுகத்திலேயே நிவாரண பொருள்கள் தேங்கும் என கடிதம் அனுப்பி உள்ளனர்.

  ஏற்கெனவே செலவு செய்த ரூ.15 லட்சத்தை ஈடுகட்ட நிதி வசூல் செய்து வரும் நிலையில், மீண்டும் ரூ.32 லட்சம் செலவு செய்வது என்பது தற்போதைக்கு இயலாத காரியம். எனவே மேற்கொண்டு என்ன செய்வது எனத் தெரியாமல் உள்ளோம் என்றார் சுப்பிரமணியம்.

முழு கட்டுரையைப் படிக்க →