முகப்பு
சென்னை

11-ம் வகுப்பு சேர்க்கை: அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி, ஜூன் 25:  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.   ஒவ்வோர் ஆண்டும் ஆரம்பாக்கம

சென்னை

11-ம் வகுப்பு சேர்க்கை: அலைக்கழிக்கப்படும் மாணவர்கள்

கும்மிடிப்பூண்டி, ஜூன் 25:  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.   ஒவ்வோர் ஆண்டும் ஆரம்பாக்கம

Updated On : 25 டிசம்பர், 2023 at 2:29 PM
பகிர்:

கும்மிடிப்பூண்டி, ஜூன் 25:  கும்மிடிப்பூண்டியை அடுத்த ஆரம்பாக்கம் மாணவர்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டு அலைக்கழிக்கப்படுகின்றனர்.

  ஒவ்வோர் ஆண்டும் ஆரம்பாக்கம் பகுதியில் இருந்து சுமார் 100 மாணவர்களாவது கும்மிடிப்பூண்டி மற்றும் கவரப்பேட்டை பள்ளிகளில் 11-ம் வகுப்புக்காக சேருவதுண்டு.

  குறிப்பாக கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் கல்வித் தரம் சிறப்பாக இருப்பதால் ஆரம்பாக்கம் பகுதி மாணவர்கள் இப் பள்ளியில் படிக்க ஆர்வம் காட்டுவது வழக்கம்.

  ஆனால் இந்த ஆண்டு கவரப்பேட்டை அரசு மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் 11-ம் வகுப்பு சேர்கைக்கு சென்ற போது அவர்களுக்கு சேர்க்கை மறுக்கப்பட்டுள்ளது.

  மத்திய அரசின் ஆறு வழிப் பாதை திட்டத்தால் தேசிய நெடுஞ்சாலை ஓரமாக இருக்கும் கவரப்பேட்டை பள்ளியின் ஒருபகுதி இடிக்கப்படும் நிலையில் இருப்பதால், போதிய இட வசதி இல்லை என்பதை காரணம் காட்டி கவரப்பேட்டையில் 10-ம் வகுப்பு படித்த மாணவர்களை தவிர ஆரம்பாக்கம் மாணவர்களுக்கு சேர்க்கை அனுமதி இல்லை என்று கூறி விட்டார்களாம்.

  அதே போல் கும்மிடிப்பூண்டி கே.எல்.கே அரசு மேல்நிலைப் பள்ளியில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு சென்றபோது எளாவூரில் அரசு மேல்நிலைப் பள்ளி இருப்பதால் அங்கு சேர்ந்துக் கொள்ளுங்கள் என்று கூறி அங்கும் ஆரம்பாக்கம் மாணவர்களுக்கு சேர்க்கைக்கு அனுமதி மறுக்கப்பட்டதாம்.

  ""ஆரம்பாக்கம் அரசு உயர்நிலைப் பள்ளியில் இருந்து இந்த ஆண்டு 135 மாணவர்களும், புனித மரியன்னை பள்ளியில் இருந்து 66 மாணவர்களும் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், அவர்களில் 20-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 400 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றிருப்பதாகவும், 150-க்கும் மேற்பட்ட மாணவர்கள் 11-ம் வகுப்பு படிக்க சேர்க்கை கிடைக்காமல் அவதிப்படுவதாக'' ஆரம்பாக்கம் அரசு உயர்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகி வழக்கறிஞர் மணிபாலன் கூறுகிறார்.

  ஆரம்பாக்கத்தில் இருந்து எளாவூரில் படிக்க எளாவூர் பஸ் நிலையத்தில் இருந்து சுமார் 2 கி.மீ.க்கு மாணவர்கள் நடந்தே பள்ளிக்குச் செல்ல வேண்டிய சிரமம் இருக்கிறது.

  ""கும்மிடிப்பூண்டியில் பஸ் நிலையம் அருகே பள்ளி இருப்பதால் தங்கள் பிள்ளைகள் அங்கு படிக்கவே விருப்பப்படுவதாக'' ஆரம்பாக்கம் பகுதி பெற்றோர்கள் கூறுகின்றனர்.

  இப்படி பல்வேறு காரணங்களை ஆரம்பாக்கம் பகுதியில் 11-ம் வகுப்பு சேர்க்கைக்கு அலைக்கழிக்கப்படும் நிலையால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக் குறியாகியுள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →