சென்னை

திரைப்பட பாடலாசிரியர் பொன்னியின் செல்வன் மரணம்

சென்னை, மே 10: திரைப்பட பாடலாசிரியர் பொன்னியின் செல்வன் (69) கடந்த வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.   பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் உதவியாளராக இருந்த இவர் "ராமாயி வயசுக்கு வந்

தினமணி

சென்னை, மே 10: திரைப்பட பாடலாசிரியர் பொன்னியின் செல்வன் (69) கடந்த வியாழக்கிழமை சென்னையில் காலமானார்.

  பிரபல தமிழ் சினிமா தயாரிப்பாளர் பஞ்சு அருணாசலத்திடம் உதவியாளராக இருந்த இவர் "ராமாயி வயசுக்கு வந்துட்டா', "பூக்களை பறிக்காதீர்கள்' உள்ளிட்ட பல படங்களுக்கு வசனம் எழுதியிருக்கிறார். "காதல் கோட்டை', "காதலே நிம்மதி' உள்பட பல படங்களில் ஏராளமான பாடல்கள் எழுதியுள்ளார்.

  கடந்த சில மாதங்களாக உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டு இருந்த பொன்னியின் செல்வன் வியாழக்கிழமை மரணம் அடைந்தார். இவரது இறுதிச் சடங்குகள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.

  பொன்னியின் செல்வனுக்கு பொன்னி என்ற மனைவியும், ஹேம்நாத் என்ற மகனும், பூர்ணிமா என்ற மகளும் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

“ஆண்டுகள் எத்தனை ஆனாலும், தமிழ்நாட்டை அண்ணாதான் ஆள்கிறார்” - முதல்வர் ஸ்டாலின்!

சுப செலவுகள் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

SCROLL FOR NEXT