முகப்பு
சென்னை

பராமரிப்பின்றி முடங்கி வரும் மயான பூமி: அலைக்கழிக்கப்படும் சடலங்கள்

சென்னை, நவ. 1: சென்னையில் நவீனமயமாக்கப்பட்டுள்ள மயான பூமிகள் போதிய பராமரிப்பின்றி செயல்படாத நிலை உருவாகியுள்ளது.   சென்னையில் மாநகராட்சி சார்பில் 38 மயான பூமிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்

Updated On : 20 செப்டம்பர், 2012 at 8:21 PM
பகிர்:

சென்னை, நவ. 1: சென்னையில் நவீனமயமாக்கப்பட்டுள்ள மயான பூமிகள் போதிய பராமரிப்பின்றி செயல்படாத நிலை உருவாகியுள்ளது.

  சென்னையில் மாநகராட்சி சார்பில் 38 மயான பூமிகள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட்டு வருகின்றன. மயானங்களுக்கு அருகிலேயே குடியிருப்புகள் வரத் தொடங்கியதைத் தொடர்ந்து, சுற்றுச்சூழல் மாசு ஏற்படாத வகையில் மயானங்களை நவீனமயமாக்கும் முயற்சியில் மாநகராட்சி இறங்கியுள்ளது.

  இதன் ஒரு பகுதியாக 11 மயானங்களில் நவீன எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் 14 மயானங்களில் எரிவாயு தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது.

Advertisement

  நாள் ஒன்றுக்கு அதிகபட்சமாக 7 சடலங்கள் எரிக்கப்படும் பெசன்ட்நகர் மயான பூமியில், இரண்டு எரிவாயு தகன மேடைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், இவற்றில் ஒன்று கடந்த இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக முடங்கிக் கிடக்கிறது. இதனால் சடலங்களின் வருகை அதிகமானால் வேறு மயானங்களுக்கு அனுப்பும் நிலை உருவாகியுள்ளது.

  மயிலாப்பூர் மயான எரிவாயு தகன மேடையும் பல நாள்களாக செயல்படாமல் உள்ளது. இங்கு வரும் சடலங்கள் அனைத்தும் அருகிலுள்ள கிருஷ்ணாம்பேட்டை மயானத்துக்கு அனுப்பப்படுகின்றன.

  சடலம் எரிக்க பேரம்: சடலங்களை எரிப்பது இலவசம் என்று அறிவிக்கப்பட்டிருந்தாலும், தனியார் நிறுவனம் மூலம் பணியமர்த்தப்பட்டிருக்கும் ஊழியர்கள் இறந்தவரின் உறவினர்களிடமிருந்து ரூ. 2 ஆயிரம் வரை பேரம் பேசி பெற்றுக்கொள்கின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.