கேரளத்தில் கடும் வெப்பம்: பல மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை!
கேரளத்தின் பல மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக வெப்பநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
கேரளத்தின் பல மாவட்டங்களில் அடுத்த இரண்டு நாட்களுக்கு அதிக வெப்பநிலை நிலவும் என இந்திய வானிலை ஆய்வு மையம் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.
இதையடுத்து வெப்ப அலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகளில் வெப்பமான மற்றும் ஈரப்பதமான வானிலை நிலவும் என்றும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து வானிலை ஆய்வு மைய தகவலின்படி, பாலக்காட்டில் ஒரு சில இடங்களில் ஞாயிறு மற்றும் திங்கட்கிழமைகளில் அதிகபட்ச வெப்பநிலை 40 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
Advertisement
Advertisement
அதேசமயம் கொல்லத்தில் அதிகபட்ச வெப்பநிலை 39 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது. பத்தனம்திட்டா, கோட்டயம், திருச்சூர் மற்றும் கோழிக்கோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்.
ஆலப்புழா, எர்ணாகுளம், மலப்புரம், கண்ணூர் மற்றும் காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் வரை பதிவாக வாய்ப்புள்ளது.
மேலும் திருவனந்தபுரம் மாவட்டத்தில் 36 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை பதிவாகக்கூடும். எனவே, இந்த பகுதிகளில் இயல்பை விட 3 டிகிரி செல்சியஸ் முதல் 4 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மலைப் பகுதிகளைத் தவிர்த்து, பாதிக்கப்பட்ட மாவட்டங்களில் இந்த இரண்டு நாட்களுக்கு வெப்பம் மற்றும் ஈரப்பதம் கலந்த வானிலை நிலவ வாய்ப்புள்ளதாக அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The IMD on Sunday issued a yellow alert for high temperatures in several districts of Kerala for the two days, warning of hot, humid weather across much of the state.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.