புழல் ஏரியில் ஆக்கிரமிப்பு: கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம்
திருவொற்றியூர், நவ. 7: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் செல்லும் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 50-க்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழும்
சென்னைபுழல் ஏரியில் ஆக்கிரமிப்பு: கிராமங்கள் வெள்ளத்தில் சிக்கும் அபாயம்
திருவொற்றியூர், நவ. 7: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் செல்லும் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 50-க்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழும்
திருவொற்றியூர், நவ. 7: சென்னை மாநகருக்கு குடிநீர் வழங்கும் புழல் ஏரியிலிருந்து வெளியேறும் வெள்ளநீர் செல்லும் கால்வாய் பல இடங்களில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் 50-க்கும் அதிகமான கிராமங்களை வெள்ளம் சூழும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
புழல் ஏரியில் நீர் தேக்கும் உயரம் 21 அடி. மொத்தக் கொள்ளளவு 3,300 மில்லியன் கன அடி. இப்போது ஏரியில் 2 ஆயிரம் மில்லியன் கன அடி தண்ணீர் உள்ளது. கனமழை நீடித்தால் புழல் ஏரி விரைவில் நிரம்பும்.
ஏரி நிரம்பி மதகுகள் திறக்கப்பட்டால் புழல் காவாங்கரை, புழல் ஒன்றியத்தில் உள்ள வடகரை, புள்ளி லைன், கிராண்ட் லைன், வடபெரும்பாக்கம், விச்சூர், மாத்தூர், மணலி புதுநகர், சடையன் குப்பம், ஆமுல்லைவாயல், வைக்காடு உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்கள் நீரால் சூழப்படும்.
கடந்த காலங்களில் வெள்ளம் ஏற்பட்ட போதெல்லாம் இக்கிராமங்கள் நீரால் சூழப்பட்டுள்ளன. விவசாய நிலங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மேடான பகுதிகள் கூட வெள்ளம் சூழ்ந்து தீவுபோல் காணப்படும் நிலை உள்ளது. பாதிக்கப்பட்ட மக்களைப் படகுகள் மூலம் மீட்கப்பட்டனர்.
வெள்ளத்தில் ரசாயனக் கழிவுகள்:இப்பகுதியில் ஏராளமான ரசாயன தொழிற்சாலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் தேக்கி வைக்கப்பட்டிருந்த ரசாயனக் கழிவுகள் கடந்த முறை வெள்ளத்தில் கலந்தன. இக்கழிவுகளால் மழைக்குப் பிறகும் சுற்றுச் சூழல் பாதிக்கப்பட்டது. இப்பிரச்னை தொடர்ந்து பல ஆண்டுகளாக நீடித்து வருகிறது.
வடிகால் ஆக்கிரமிப்பு:பூண்டி, சோழவரம், மாதவரம் இரட்டை ஏரி மற்றும் புழல் ஏரிகளின் உபரி நீர் இக்கிராமங்கள் வழியாக எண்ணூர் முகத்துவாரம் சென்று கடலில் கலக்கும். இதற்கென தனியாக கால்வாய்கள் உள்ளன. ஆனால் பல இடங்களில் கால்வாய் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. மணலி அருகே இக்கால்வாய் இடம் தெரியாமல் சிதைந்து போயுள்ளது. இதனால்தான் ஏரியிலிருந்து வெளியேரும் வெள்ளநீர் கிராமங்களில் புகுந்து சேதம் ஏற்படுத்துகிறது.
புதிய கால்வாய் வேண்டும்: இது குறித்து மணலி நகர்மன்ற தலைவர் முல்லை ஞானசேகர் கூறியது:
புழல் ஏரி திறக்கப்படும் போதெல்லாம் இப்பகுதி மக்கள் அடையும் துயரங்கள் சொல்லிமாளாது. ஆண்டுதோறும் தொடரும் இப்பிரச்சினை குறித்து அதிகாரிகள் கவலையடைந்ததாகத் தெரியவில்லை. அரசும் பாராமுகமாகவே உள்ளது. கால்வாயில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றிவிட்டு புழலில் இருந்து எண்ணூர்வரை புதிய கால்வாய் கட்டப்பட வேண்டும். இதனால் வெள்ள பாதிப்பு ஏற்படாமல் காக்க இயலும்.
கால்வாயை அமைக்க கால அவகாசம் தேவை என்றாலும் ஆக்கிரமிப்புகளை அகற்றி, தேவையான இடங்களில் கால்வாயை ஒழுங்குபடுத்தி போர்க்கால அடிப்படையில் பணிகளைச் செய்ய வேண்டும் என்றார்.