சென்னை

சென்னையில் அதிகரிக்கும் குற்றங்கள்: வெளி மாநிலத் தொழிலாளர்கள் கண்காணிக்கப்படுவார்களா?

சென்னை: சென்னையில் பெருகி வரும் குற்றங்களைக் குறைக்க வெளி மாநிலத் தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.  ÷சென்னையில் தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக சில ஆண்

கே.வாசுதேவன்

சென்னை: சென்னையில் பெருகி வரும் குற்றங்களைக் குறைக்க வெளி மாநிலத் தொழிலாளர்கள் கண்காணிக்கப்பட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

 ÷சென்னையில் தொழிலாளர் பற்றாக்குறையின் காரணமாக சில ஆண்டுகளாக கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல்கள், தொழிற்சாலைகள், சுகாதார நிறுவனங்கள் உள்ளிட்ட தொழில்களில் வெளி மாநில தொழிலாளர்கள் அதிகமாக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

 குறிப்பாக கட்டுமான நிறுவனங்கள், ஹோட்டல்களில் பணிபுரியும் தொழிலாளர்களில் 60 சதவிகிதத்தினர் வடமாநிலங்களைச் சேர்ந்தவர்களாகவே இருப்பதாக கட்டுமான நிறுவன உரிமையாளர் ஒருவர் கூறுகிறார். கட்டுமானப் பணியில் மொத்தம் 1.20 லட்சம் பேர் உள்ளதாகவும் அவர் தெரிவிக்கிறார்.

 ÷குறைவான ஊதியம் கொடுத்தாலே போதும் என்பதால், வெளிமாநிலத் தொழிலாளர்கள் அதிகளவில் பணிக்கு அமர்த்தப்படுகின்றனர். இதனால், ஆந்திரப்பிரதேசம், உத்தரப்பிரதேசம், மத்திய பிரதேசம், மேற்கு வங்கம், பிகார், சத்தீஸ்கர் ஆகிய மாநிலங்களில் இருந்து அதிக எண்ணிக்கையிலான தொழிலாளர்கள் சென்னையில் பணிபுரிந்து வருகின்றனர்.

 ஆனால், வெளி மாநிலத் தொழிலாளர்களை தேர்வு செய்யும் தனியார் நிறுவனங்கள், அவர்களது பின்னணி குறித்து எந்த தகவல்களையும் சேகரிப்பது இல்லை.

 சில நிறுவனத்தினர், இவர்களுக்கு அங்கீகாரம் அளிப்பதைக் கூட விரும்பாமல், அடையாள அட்டை வழங்குவதைத் தவிர்த்துவிடுகின்றனர்.

 ÷தொழில் நிறுவனங்களின் இத்தகைய செயல்பாட்டால் வெளி மாநிலத் தொழிலாளர்கள் என்ற போர்வையில் சென்னைக்குள் ஊடுருவும் சமூக விரோதிகளைப் பற்றி தகவல்களைச் சேகரிப்பதில் காவல் துறைக்குச் சிரமம் ஏற்பட்டுள்ளது.

 ÷சமீபகாலமாக மாநகரில் திருட்டு, வழிப்பறிச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், அதில் ஈடுபடுபவர்களில் குறிப்பிட்ட சதவிகிதத்தினர் வெளி மாநில இளைஞர்களாக இருக்கின்றனர் எனக் கூறப்படுகிறது.

 ÷ஒரு சில வழக்குகளில் குற்றவாளிகளைக் கண்டுபிடித்து வழக்குப் பதிவு செய்தாலும், பெரும்பாலான வழக்குகளில் துப்புத்துலக்க முடியாத நிலை உள்ளது.

 வெளி மாநிலத் தொழிலாளர்களைப் பற்றி முறையான தகவல்கள் இல்லாததால் வழக்கின் விசாரணையில் பின்னடைவு ஏற்படுவதாக மாநகர காவல்துறையைச் சேர்ந்த உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

 இப் பிரச்னையின் தீவிரத்தை காவல் துறையினர் தற்போது உணரத் துவங்கியுள்ள நிலையில், சென்னையில் உள்ள வெளி மாநிலத் தொழிலாளர்களை தீவிரமாகக் கண்காணிக்க வேண்டும் என உளவுத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது.

 ÷வெளி மாநிலத் தொழிலாளர்களின் பின்னணியை அறியாமல் பணிக்கு அமர்த்தும் தனியார் நிறுவனத்தினர் மீது காவல் துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 அவர்களின் செயல்பாடுகளை காவல் துறையினர் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT