முகப்பு
சென்னை

துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஆய்வு செய்யும் பணி தாமதம்

திருவொற்றியூர், மார்ச் 24: சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஆய்வுசெய்யும் பணி தாமதமாவதால், லாரிகள் 30 கி.மீ. தூரம் வரை காத்திருக்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை

சென்னை

துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஆய்வு செய்யும் பணி தாமதம்

திருவொற்றியூர், மார்ச் 24: சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஆய்வுசெய்யும் பணி தாமதமாவதால், லாரிகள் 30 கி.மீ. தூரம் வரை காத்திருக்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சென்னை

Updated On : 2 ஜனவரி, 2024 at 4:38 PM
பகிர்:

திருவொற்றியூர், மார்ச் 24: சென்னை துறைமுகத்தில் கன்டெய்னர்களை ஆய்வுசெய்யும் பணி தாமதமாவதால், லாரிகள் 30 கி.மீ. தூரம் வரை காத்திருக்கின்றன. இதனால், அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.

சென்னை துறைமுகத்தில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் 3 லட்சம் கன்டெய்னர்கள் கையாளப்பட்டன. இப்போது இதன் எண்ணிக்கை 15 லட்சம் கன்டெய்னர்களாக உயர்ந்துள்ளது. ஆனால், இதற்கேற்ப சாலை உள்ளிட்ட வசதிகள் ஏற்படுத்தப்படவில்லை.

கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதற்காக அறிவிக்கப்பட்ட துறைமுக இணைப்புச் சாலைகள், மதுரவாயல் பறக்கும் மேம்பாலம் உள்ளிட்ட திட்டங்களும் நிறைவுபெறவில்லை.

இதனால் துறைமுகத்துக்குச் செல்லும் கன்டெய்னர் லாரிகள் பல மணி நேரம் சாலையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை நீண்ட நாள்களாக உள்ளது.

நாள்கணக்கில் நிற்க வேண்டியிருப்பதால், லாரிகளின் வாடகை உயர்ந்துவிட்டது. இப்பணிக்கு வர லாரி டிரைவர்கள் தயக்கம் காட்டுகின்றனர்.

நீண்ட நேரம் ஆய்வு: இந்நிலையில் கடந்த வாரம் துறைமுகத்திலிருந்து தவறுதலாக வெளியே கொண்டு செல்லப்பட்ட கன்டெய்னர் லாரியை பறிமுதல் செய்த தொழிலக பாதுகாப்புப் படையினர், அதை காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

இது தொடர்பாக சரக்குப் பெட்டக முனைய ஊழியர்கள், லாரி டிரைவர் உள்ளிட்டோரை போலீஸôர் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக சுங்கத்துறை அதிகாரிகள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது எனத் தெரியவில்லை.

இந்தச் சம்பவத்தையடுத்து துறைமுகத்துக்கு வந்து செல்லும் கன்டெய்னர் லாரிகளை தீவிரமாக ஆய்வு செய்கின்றனர். இதனால், முன்பு ஒரு மணி நேரத்தில் 40 லாரிகளை வெளியே அனுப்ப அனுமதியளித்த நிலையில், இப்போது அதில் பாதியை மட்டுமே அனுப்புகின்றனர்.

30 கி.மீ. தூரத்துக்கு காத்திருக்கும் லாரிகள்: இதனால் கடந்த 3 நாள்களாக எண்ணூர்வரை சுமார் 20 கி.மீ. தூரத்துக்கு லாரிகள் காத்திருக்கின்றன. இதற்குமேல் அங்கு இடம் இல்லாததால் மணலி வழியே வரும் கன்டெய்னர் லாரிகள் சாத்தாங்காடு ஸ்டீல் யார்டு பகுதியில் திருப்பி விடப்பட்டு, அங்கும் சுமார் 10 கி.மீ. தூரத்துக்கு லாரிகள் நிறுத்திவைக்கப்பட்டுள்ளன.

""இதே நிலை தொடர்ந்து பல நாள்கள் நீடித்தால், அதிகாரிகளைக் கண்டித்து வேலைநிறுத்தம் செய்வதைத் தவிர வேறு வழியில்லை'' என்றார் டிரைலர் லாரி உரிமையாளர் சங்கத்தின் செயலாளர் ராஜா.

அதிகாரிகள் பற்றாக்குறை:

துறைமுகத்தில் 4-க்கும் மேற்பட்ட நுழைவு வாயில்கள் உள்ள நிலையில், அங்கு ஆய்வப் பணியில் மேற்கொள்வதற்கு தேவையான எண்ணிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள், காவலர்கள், பாதுகாப்புப் படையினர் நியமிக்கப்படவில்லை. ஒருசிலர் மட்டுமே பணியில் உள்ளதால், ஆய்வுப் பணிகள் தாமதமாகின்றன. கூடுதல் அதிகாரிகளை நியமிக்க நடவடிக்கை எடுக்குமாறு சுங்கத்துறை ஆணையரிடம் புகார் அளித்துள்ளோம் என்று சுங்கத்துறை முகமை சங்க நிர்வாகி நடராஜன் தெரிவித்தார்.

விரைவில் தீர்வு:÷துறைமுகத் தலைவர் அதுல்ய மிஸ்ரா கூறியது: ""கூடுதல் நுழைவு வாயில்கள் அமைக்கப்பட்டுள்ளதற்கு ஏற்ப போதுமான எண்ணிக்கையில் சுங்கத்துறை அதிகாரிகள் நியமிக்கப்படவில்லை என்பது உண்மைதான். இது குறித்து சுங்கத்துறை முதன்மை ஆணையரின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்படும்'' என்றார் அதுல்ய மிஸ்ரா.

முழு கட்டுரையைப் படிக்க →