முகப்பு
சென்னை

மெட்ரோ ரயில் பெட்டிகளின் தர ஆய்வு முடிவடைந்தது

மெட்ரோ ரயில் பெட்டிகளின் தர ஆய்வு முடிவடைந்ததையடுத்து வரும் ஜூன் மாதம் பிரேசிலில் இருந்து சென்னைக்கு முதல் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:14 AM
பகிர்:

மெட்ரோ ரயில் பெட்டிகளின் தர ஆய்வு முடிவடைந்ததையடுத்து வரும் ஜூன் மாதம் பிரேசிலில் இருந்து சென்னைக்கு முதல் மெட்ரோ ரயில் கொண்டு வரப்படவுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சென்னை மெட்ரோ ரயில் போக்குவரத்துக்கு தேவையான ரயில் பெட்டிகளை பிரான்ஸ் நாட்டின் ஆல்ஸ்டோம் நிறுவனம் தயாரித்து வழங்கவுள்ளது. பிரேசில் நாட்டின் சா பாலோ மற்றும் லாபா நகரத்தில் இந்நிறுவனத்தின் மெட்ரோ ரயில் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இங்குதான் சென்னை மெட்ரோ ரயிலுக்கான பெட்டிகள் தயாரிக்கப்பட்டு வருகின்றன.

இவற்றின் தரம் மற்றும் வடிவமைப்பு குறித்த ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் திட்ட அதிகாரிகள் மேற்கொண்டனர். முதல் கட்டமாக தயாரிக்கப்பட்ட 4 பெட்டிகளின் தரத்தையும் ஆய்வு செய்து, பெட்டியின் தரத்தை அவர்கள் உறுதி செய்துள்ளனர்.

Advertisement

இதனையடுத்து, 4 பெட்டிகள் கொண்ட முதல் ரயில் வரும் ஜூன் மாதம் பிரேசிலில் இருந்து கப்பல் மூலம் சென்னைக்கு கொண்டு வரப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

9 ரயில்கள்: பிரேசிலில் இருந்து ஜூன் மாதத்துக்கு பின்பு அடுத்தடுத்து 9 ரயில்கள் (36 பெட்டிகள்) சென்னைக்கு வரவுள்ளது. முதல் ரயிலின் தரத்தை அடிப்படையாக கொண்டு பிற பெட்டிகள் தயாரிக்கப்படும்.

சென்னையில் மட்டும் மொத்தம் 44 மெட்ரோ ரயில்கள் இயக்கப்பட உள்ளன. ஒவ்வொரு ரயிலுக்கும் 4 பெட்டிகள் என்ற அளவில் பெட்டிகள் தயாரிக்கப்படுகின்றன. ஒரு பெட்டியைத் தயாரிக்க மட்டும் ரூ.9 கோடி செலவாகிறது. மொத்தமாக பெட்டிகள் தயாரிப்புக்கு ரூ.1471 கோடியே 39 லட்சம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

மீதமுள்ள ரயில்கள்: மெட்ரோ ரயில் பெட்டிகள் தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ஆல்ஸ்டோம் நிறுவனத்தின் துணை நிறுவனம் ஆந்திர மாநிலம் தடாவில் உள்ள ஸ்ரீசிட்டியில் தொடங்கப்பட்டுள்ளது. இங்கு 33 ரயில்களுக்கான 132 பெட்டிகள் தயாரிக்கப்படும்.

மெட்ரோ ரயிலுக்கான மாதிரி ரயில் பெட்டி ஒன்று பிரேசில் நாட்டில் இருந்து சென்னைக்கு கொண்டு வரப்பட்டு, ஏற்கெனவே தொழிற்சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

தானியங்கி கதவுகள்: சென்னை மெட்ரோ ரயில் மேம்பாலம் மற்றும் சுரங்கம் வாயிலாகச் செல்வதால் பெட்டிகள் முழுவதும் குளிர்சாதன வசதி செய்யப்பட்டிருக்கும்.

இதன் கதவுகள், அதுவே திறந்து மூடும் தானியங்கி முறையில் இருக்கும். 25 கிலோ வாட் மின்சாரத்தில், 80 கிலோ மீட்டர் வேகத்தில் மெட்ரோ ரயில் செல்லும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments