முகப்பு
சென்னை

கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் அமைக்கும் பணிகள் தொடக்கம்

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

Updated On : 3 ஜனவரி, 2024 at 11:45 AM
பகிர்:

சென்னை கோயம்பேடு மெட்ரோ ரயில் நிலையத்தில் நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்கும் பணிகளை மெட்ரோ ரயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.

மேலும் மாற்றுத் திறனாளிகள், முதியோர்கள் பயன்படுத்தும் வகையில் நகரும் சாய்வு தளங்கள் பொருத்தும் பணிகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சென்னையில் முதல்கட்டமாக கோயம்பேடு முதல் பரங்கிமலை வரை மேம்பாலம் வழியாக மெட்ரோ ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் இந்தாண்டு இறுதியில் தனது முதல் ஓட்டத்தை தொடங்குகிறது.

Advertisement

முதல்கட்டமாக மெட்ரோ ரயில் மேம்பாலம் வாயிலாக செல்லவுள்ளதால், இதற்கான ரயில் நிலையங்கள் அமைக்கும் பணிகளும் துரிதப்படுத்தப்பட்டுள்ளன. சென்னையில் மொத்தம் 32 மெட்ரோ ரயில் நிலையங்களில் 320 நகரும் படிகட்டுகளும் 120 லிஃப்ட்களும் அமைக்கப்படுகின்றன. இதேபோல கோயம்பேட்டில் உள்ள மெட்ரோ ரயில் பணிமனை மற்றும் கட்டுபாட்டு அறையின் கட்டுமானப் பணியும் முடியும் தருவாயில் உள்ளது. இங்கும் நகரும் படிகட்டுகள் மற்றும் லிஃப்ட் அமைக்கும் பணிகளை நிர்வாகம் வேகப்படுத்தியுள்ளது.

ஆலந்தூர் நிலையம்: ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்தில், இரண்டு தளங்களின் கட்டுமானப் பணிகள் முடிவடைந்துள்ளன. மெட்ரோ ரயில் திட்டத்தில், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையம் மிக முக்கியமான சந்திப்பாகும். இந்த ரயில் நிலையம் முனையமாகவும் அமையவிருப்பதால் ரூ.20 கோடி செலவில் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

வண்ணாரப்பேட்டை - விமான நிலைய மெட்ரோ ரயில் பாதை மற்றும் சென்ட்ரல் - கோயம்பேடு - பரங்கிமலை மெட்ரோ ரயில் பாதைகளின் இணைப்பு நிலையமாக ஆலந்தூர் ரயில் நிலையம் அமையவிருக்கிறது.

இந்த நிலையத்தில் வண்ணாரப்பேட்டை - விமான நிலைய மெட்ரோ ரயில் பாதை 11 மீட்டர் உயரத்தில் முதல் தளத்திலும், சென்ட்ரல் - பரங்கிமலை இடையேயான மெட்ரோ ரயில் பாதை நிலையம் 23 மீட்டர் உயரத்தில் இரண்டாவது தளத்திலும் அமைகிறது.

ரயில் நிலையங்கள்: சென்னை மெட்ரோ ரயிலுக்காக 32 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

வண்ணாரப்பேட்டை, மண்ணடி, உயர்நீதிமன்றம், புதிய தலைமைச் செயலகம், எல்.ஐ.சி., ஆயிரம் விளக்கு, ஜெமினி, தேனாம்பேட்டை, சேமியர்ஸ் சாலை மற்றும் சைதாப்பேட்டை ரயில் நிலையங்கள் சுரங்கப்பாதையில் அமைக்கப்படுகின்றன.

சின்னமலை, கிண்டி, ராணுவ அலுவலர் பயிற்சி மையம் (ஓ.டி.ஏ.), மீனம்பாக்கம் மற்றும் விமான நிலையத்தில் மேம்பால ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

சென்னை சென்ட்ரல், எழும்பூர், நேரு பூங்கா, கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரி, பச்சையப்பன் கல்லூரி, ஷெனாய் நகர், அண்ணா நகர் கிழக்கு, அண்ணா நகர் டவர் மற்றும் திருமங்கலம் நிலையங்கள் சுரங்கப்பாதையிலும், கோயம்பேடு, கோயம்பேடு புறநகர் ரயில் நிலையம், அரும்பாக்கம், வடபழனி, அசோக் நகர், கே.கே.நகர், சிட்கோ (கிண்டி), ஆலந்தூர் மற்றும் பரங்கிமலை இடையே மேம்பாலத்திலும் ரயில் நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments