காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் 63 நாயன்மார்களின் மாதாந்திர காலாண்டர் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது.
63 நாயன்மார்கள் தொண்டர் குழு சார்பில், கடந்த 3 ஆண்டுகளாக நாயன்மார்களின் மாதாந்திர காலாண்டர் வெளியிடப்பட்டு வருகிறது.
சமயம் காத்த அறுபத்து மூவரின் வரலாற்றை இன்றைய சிறுவர்கள், இளைஞர்கள் தெரிந்து கொள்ளும் நோக்கில் வெளியிடப்பட்டுள்ளதாக குழுவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற ஆசிரியர் வி. சிதம்பரம் தெரிவித்தார்.
இந்த காலண்டரில் 63 நாயன்மார்கள் பற்றிய சிறு குறிப்புகள், அவர்கள் வாழ்ந்த காலம், வாழ்ந்த ஊர், சைவ சமயத்துக்கு அவர்கள் ஆற்றிய தொண்டுகள் குறித்து இந்த சுருக்கமாக விளக்கியுள்ளனர். மேலும் அவர்களது ஜென்ம நட்சத்திரமும் குறிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வரும் 2015-ஆம் ஆண்டுக்கான மாதாந்திர 63 நாயன்மார்கள் காலாண்டர் காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்பட்டது. திருவாடுதுறை ஆதினக் கிளை மடம் சுந்தரமூர்த்தி சுவாமிகள் தலைமை வகித்தார். பக்தவச்சலம் பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சிவநேசன் காலண்டரை வெளியிட, 63 நாயன்மார்கள் தொண்டர்கள் குழுவைச் சேர்ந்த காளத்தி, பன்னீர்செல்வம் ஆகியோர் பெற்று கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கச்சபேஸ்வரர் கோயில் செயல் அலுவலர் வஜ்ஜிரவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.