சென்னை

திருவொற்றியூர்

தொகுதி ஓர் அறிமுகம்

தினமணி

தொகுதி ஓர் அறிமுகம்

* தொகுதி பெயர் திருவொற்றியூர்

* தொகுதி எண் 10

* சிறப்புகள்

திருவள்ளூர் மாவட்ட எல்லைக்கு உள்பட்டதாக இருந்தாலும், உள்ளாட்சி நிர்வாகத்தில் சென்னை மாநகராட்சியுடன் இணைந்துள்ள பகுதி திருவொற்றியூர் தொகுதி.

வடசென்னையில் அமைந்துள்ள இந்தத் தொகுதி 1967-ஆம் ஆண்டு முதல் இருந்து வருகிறது. 2011 தேர்தலுக்கு முன்பு வரை மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கையில் தமிழகத்திலேயே மூன்றாவது இடத்தில் இருந்தது திருவொற்றியூர் தொகுதி. இதிலிருந்து தொகுதி சீராய்வின்போது மாதவரம் தனியாகப் பிரிக்கப்பட்டது.

அன்றைய சென்னை பட்டினத்தை ஒட்டிய பழைமையான கடலோரக் கிராமங்களில் திருவொற்றியூரும் ஒன்று. துறவி பட்டினத்தார் முக்தி அடைந்து ஜீவசமாதி அடைந்த இடமும் திருவொற்றியூர்தான். எண்ணூர் அனல் மின் நிலையம், அசோக் லேலண்டு, எண்ணூர் ஃபவுண்டரி, எம்ஆர்எஃப் டயர், சென்னை எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை, மெட்ராஸ் உர ஆலை, என்ஃபீல்டு மோட்டார் சைக்கிள், கார்போரண்டம், டிபிஎல், எம்பிஎல், எவரெடி என ஏராளமான கனரக தொழிற்சாலைகள் நிறைந்த தொகுதி திருவொற்றியூர். இத்தொகுதியில் அடங்கிய மணலியில் ஏராளமான ரசாயனத் தொழிற்சாலைகள் அமைந்துள்ளன.

திருவொற்றீஸ்வரர் என அழைக்கப்படும் தியாகராஜ சுவாமி உடனுறை வடிவுடையம்மன் கோயில், காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோயில், பட்டினத்தார் கோயில், அகத்தீஸ்வரர் கோயில், வடகுருஸ்தலம் என அழைக்கப்படும் தட்சிணாமூர்த்தி கோயில் உள்ளிட்ட கோயில்கள் அடங்கிய ஆன்மிக நகரம் திருவொற்றியூர்.

இப்பகுதியில் இருபதுக்கும் மேற்பட்ட மீனவக் கிராமங்கள் உள்ளன. பக்கிங்ஹாம் கால்வாய் சென்னை மாநகரத்திற்குள் நுழைவது திருவொற்றியூர் தொகுதியில்தான்.

* தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்

திருவொற்றியூர் தொகுதிக்கு கிழக்கே வங்கக் கடல், தெற்கே ஆர்.கே.நகர், வடக்கு மற்றும் மேற்கில் மாதவரம் தொகுதி ஆகியவை இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.

சென்னை மாநகராட்சிக்கு உள்பட்ட கத்திவாக்கம் அடங்கிய திருவொற்றியூர் மண்டலம், சின்னச் சேக்காடு அடங்கிய மணலி மண்டலம் ஆகியவை இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன.

* வாக்காளர்கள்

ஆண்கள் : 1,43,741

பெண்கள் : 1,43,076

திருநங்கைகள் : 66

மொத்தம் : 2,86,883

* வாக்குச்சாவடிகள் : 292

* இதுவரை எம்எல்ஏ க்கள்....

1967 - அ.பொ.அரசு (திமுக)

1971 - மா.வெ.நாராயணசாமி (திமுக)

1977 - பொ.சிகாமணி (அதிமுக)

1980 - குமரிஅனந்தன் (காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ்)

1984 - ஜி.கே.ஜே.பாரதி (காங்கிரஸ்)

1989 - டி.கே.பழனிசாமி (திமுக)

1991 - கே.குப்பன் (அதிமுக)

1996 - டி.சி.விஜயன் (திமுக)

2001 - த.ஆறுமுகம் (அதிமுக)

2006 - கே.பி.பி.சாமி (திமுக)

2011 - கே.குப்பன் (அதிமுக)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இதுவரை பார்க்காத ஒன்று... மகேஷ் பாபு படம் பற்றி ராஜமௌலி!

இரண்டு நாள்களில் தில்லியிலும் டெஸ்லா! இந்தியாவில் 2வது விற்பனையகம்!

பாமக பொதுக்குழு கூட்டம் தொடக்கம்! மேடையில் ராமதாஸுக்கு இருக்கை!!

அஜர்பைஜான் - ஆர்மீனியா மோதல்! மத்தியஸ்தம் செய்த டிரம்ப்புக்கு நோபல் வழங்க கோரிக்கை!

கிரிஸ் கங்காதரன் நிகழ்த்திய மேஜிக்... லோகேஷ் நெகிழ்ச்சி!

SCROLL FOR NEXT