முகப்பு
கிரிக்கெட்

13 ஆண்டுகள் காத்திருப்பை நிறைவேற்றிய ‘ரோ - கோ’ மேஜிக்! 2024 டி20 உலகக் கோப்பை ரீவைண்ட்!!

2024 ஆம் ஆண்டு அமெரிக்காவில் நடைபெற்ற டி20 உலகக் கோப்பையில் இந்திய அணி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றதைப் பற்றி...

Updated On : 5 மார்ச், 2026 at 6:24 PM
கோப்பை வென்ற மகிழ்ச்சியில் இந்திய அணியினர். - படம் : எக்ஸ்!
பகிர்:
Updated On : 12 பிப்ரவரி, 2026 at 3:59 PM

பிரிட்ஜ்டௌன், ஜூன் 29: டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி இறுதி ஆட்டத்தில் பரபரப்பான கடைசி த்ரில் ஓவரில் தென்னாப்பிரிக்காவை 7 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி 2-வது முறையாக உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது இந்தியா. இதன் மூலம் 13 ஆண்டுகள் காத்திருப்பு நிறைவேறியது.

அமெரிக்காவில் கிரிக்கெட் விளையாட்டைப் பிரபலப்படுத்தும் நோக்கில் 2024 ஆம் ஆண்டுக்கான டி20 உலகக் கோப்பை போட்டியை முதல் முறையாக அமெரிக்கா - மேற்கிந்தியத் தீவுகள் இணைந்து நடத்தின. இதற்காக தற்காலிக திடல்கள் அமைக்கப்பட்டன. மேலும், ஆஸ்திரேலியாவில் இருந்து விமானம் மூலம் ஆடுகளங்கள் கொண்டுவரப்பட்டன.

டல்லாஸ், நியூயார்க், கயானா, பிரிட்ஜ் டவுன், நார்த் சௌண்ட், லௌடர் ஹில், டரௌபா, கிங்ஸ்டன், செயிண்ட் லூசியா உள்ளிட்ட இடங்களில் போட்டிகள் நடைபெற்றன.

Advertisement

குரூப் ஏ, பி, சி, டி என நான்கு பிரிவுகளாக தலா 5 அணிகளாக 20 அணிகள் பிரிக்கப்பட்டிருந்தன. இதில், குரூப் ஏ-பி இந்தியா, அமெரிக்கா, குரூப் பி பிரிவில் ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, குரூப் சி பிரிவில் மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா மற்றும் வங்கதேச அணிகள் தகுதிபெற்றன.

இதில், பாகிஸ்தான், நியூசிலாந்து உள்ளிட்ட முன்னணி அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேற முடியாமல் லீக் சுற்றுப் போட்டிகளிலேயே வெளியேறி அதிர்ச்சியளித்தன.

சூப்பர் 8 சுற்றில் முன்னாள் சாம்பியனான ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சியளித்து அரையிறுதிப் போட்டிக்குத் தகுதி பெற்றது ஆப்கானிஸ்தான் அணி.

அரையிறுதிக்கு இந்தியா, ஆப்கானிஸ்தான், தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து ஆகிய அணிகள் தகுதி பெற்றன. முதலாவது அரைறுதியில் இந்திய அணி இங்கிலாந்தைத் தோற்கடித்து

முதலாவது அரையிறுதிப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியை 56 ரன்களுக்கு சுருட்டிய தென்னாப்பிரிக்காவும், இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இங்கிலாந்தை 103 ரன்களில் சுருட்டிய இந்திய அணியும் இறுதிப்போட்டிக்குத் தகுதி பெற்றன.

இறுதிப்போட்டி

இந்தியா - தென்னாப்பிரிக்கா மோதிய ஐசிசி டி20 உலகக் கோப்பையின் இறுதிப்போட்டி பார்படாஸின் பிரிட்ஜ்டௌன் திடலில் ஜூன் 29 ஆம் தேதி இரவு நடைபெற்றது.

முதலில் டாஸ் வென்ற இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ரோஹித் சர்மா - விராட் கோலி.

அதிர்ச்சித் தொடக்கம்

தொடக்க பேட்டர்களாக கேப்டன் ரோஹித்சர்மா - விராட் கோலி இருவரும் களமிறங்க வெறும் 9 ரன்களுடன் மகராஜ் பந்தில் க்ளாஸ்ஸனிடம் கேட்ச் தந்து அவுட்டானார் ரோஹித் சர்மா. பின்னர், வந்த இளம் வீரரும் விக்கெட் கீப்பருமான ரிஷப் பந்த்தும் மகராஜ் பந்தில் விக்கெட் கீப்பர் டி காக்கிடம் கேட்ச் தந்து டக் அவுட்டாகி வெளியேறினார்.

அதன்பின்னர், சூரியகுமார் யாதவும் நிலைத்து ஆடி ஸ்கோரை உயர்த்துவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் 3 ரன்களுடன் ரபாடா பந்தில் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அப்போது இந்தியா 34 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறிக் கொண்டிருந்தது.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 4:03 PM

கோலி - அக்ஸர் அசத்தல்

பின்னர், அடுத்து வந்த ஆல்ரவுண்டர் அக்‌ஷர் பட்டேல் தென்னாப்பிரிக்காவின் பந்து வீச்சைச் சிதறடித்தார். கோலியும் அக்‌ஷரும் இணைந்து பொறுப்பை உணர்ந்து ஆடி சரிவில் இருந்து அணியை மீட்டனர். இருவரும் இணைந்து நான்காவது விக்கெட்டுக்கு 72 ரன்களைச் சேர்த்தனர்.

வீணாக ரன் அவுட்டான அக்‌ஷர்

4 சிக்ஸர், 1 பௌண்டரியுடன் 31 பந்துகளில் 47 ரன்களை விளாசிய அக்‌ஷர் பட்டேல் தேவையின்றி ரன் அவுட்டானார். தொடர்ந்து விராட் கோலியுடன் இணைந்து இளம் வீரர் ஷிவம் துபே ஸ்கோரை உயர்த்தினார்.

விராட் கோலி அபாரம் 76

தொடக்க பேட்டரான விராட் கோலி நிலைமையை உணர்ந்து ஆடி 2 சிக்ஸர், 6 பௌண்டரியுடன் 59 பந்துகளில் 76 ரன்களை விளாசி மார்கோ யான்ஸன் பந்தில் அவுட்டானார். ஷிவம் டுபே 1 சிக்ஸர், 3 பௌண்டரியுடன் 27 ரன்களுடனும், ஜடேஜா 2 ரன்களுடனும் விக்கெட்டைப் பறிகொடுத்தனர்.

இந்தியா 176/7

நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் இழப்புக்கு 176 ரன்களைச் சேர்த்தது. பௌலிங்கில் தென்னாப்பிரிக்கத் தரப்பில் கேசவ் மகராஜ், அன்ரிட் நார்ட்ஜே இருவரும் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

தென்னாப்பிரிக்கா 169/8

177 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணியில் ரீஸா ஹெண்டிரிக்ஸ் மற்றும் கேப்டன் எய்டன் மார்க்ரம் இருவரும் தலா 4 ரன்களில் விக்கெட்டை இழந்தனர். அவர்களைத் தொடர்ந்து விக்கெட் கீப்பர் டிகாக் 39 ரன்கள், திரிஸ்டன் ஸ்டப்ஸ் 31 ரன்கள் எடுத்து பெவிலியன் திரும்பினர்.

12.3 ஓவர்களில் தென்னாப்பிரிக்க அணி 4 விக்கெட்டுகள் இழப்புக்கு 106 ரன்கள் எடுத்து கிட்டத்தட்ட வெற்றி பெறும் சூழலில் இருந்தது. அதைத் தொடர்ந்து வந்த க்ளாசன் இந்திய வீரர்களின் பந்து வீச்சை அடித்து நொறுக்கினார்.

குறிப்பாக அக்‌ஷர் பட்டேலை கடுமையாகத் தாக்கிய க்ளாசன் 2 பௌண்டரிகளையும், 5 சிக்ஸர்களையும் பறக்கவிட்டு 27 பந்துகளில் 52 ரன்களை குவித்து வெளியேறினார். 16.1 ஓவர்களில் 5 விக்கெட்டுகளுக்கு 151 ரன்கள் எடுத்து தென்னாப்பிரிக்க அணி கோப்பையை நெருங்கிக் கொண்டிருந்தது.

ஜஸ்ப்ரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங் இருவரும் கட்டுக்கோப்பாக பந்து வீசி தென்னாப்பிரிக்காவின் வேகத்தைக் கட்டுப்படுத்தினர். கடைசி 30 பந்துகளில் 30 ரன்களை என்ற நிலையில் முழுமையாக 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்புக்கு 169 ரன்களை மட்டுமே எடுத்தது தென்னாப்பிரிக்க அணி.

அபாரமாக பந்து வீசிய ஹார்திக் பாண்டியா 3-20 விக்கெட்டுகளையும், ஹர்ஷ்தீப் 2-20, பும்ரா 2-18 விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தினர்.

Updated On : 12 பிப்ரவரி, 2026 at 4:10 PM

நான்காவது உலக சாம்பியன் பட்டம்

இரண்டாவது முறையாக டி20 உலகக்கோப்பையை வென்ற இந்தியா 13 ஆண்டுகள் காத்திருப்புக்கு முற்றுப்புள்ளி வைத்தது. 1983, 2011 ஒருநாள் உலகக் கோப்பை, 2007, 2024 டி20 உலகக் கோப்பை என நான்காவது முறையாக ஐசிசி உலக சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

மில்லர் அவுட்டால் திருப்பு முனை

அபாயகரமான பேட்டரான மில்லர் களத்தில் இருந்த நிலையில் 19.1 ஓவரில் பாண்டியா பந்தில் அவர் அடித்த ஷாட்டை பவுண்டரி எல்லைக்கோடு அருகே அற்புதமாக கேட்ச் பிடித்தார் சூரியகுமார் யாதவ். இது இந்தியாவுக்குத் திருப்பு முனையை ஏற்படுத்தியது.

விராட் கோலி, ரோஹித் சர்மா

டி20 போட்டிகளில் கோலி, ரோஹித் சர்மா இருவரும் ஓய்வு

உலக சாம்பியன் பட்டத்தை இந்தியா வெல்ல உதவிய நிலையில், டி20 ஆட்டத்தில் இருந்து ஓய்வு பெறுவதாக விராட் கோலி, ரோஹித் சர்மா இருவரும் அறிவித்தனர். மேலும், எதை அடைய வேண்டும் என நினைத்தோமோ அதை அடைந்துள்ளோம். இதுவே எனது கடைசி டி20 உலகக் கோப்பை என்றார் விராட் கோலி.

summary

India won the T20 World Cup for the second time after defeating South Africa by 7 runs in a thrilling final over in the final match of the tournament, ending a 13-year wait.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.