முகப்பு
சென்னை

அதிகாரம் டூ அரசியல்... எப்படி?

தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குநரும், இப்போது மயிலாப்பூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராகவும் இருப்பவர் நடராஜ். இந்திய

Updated On : 3 மே, 2016 at 12:30 AM
பகிர்:
Updated On : 24 ஜனவரி, 2024 at 10:40 PM

தமிழக காவல் துறையின் முன்னாள் இயக்குநரும், இப்போது மயிலாப்பூர் பேரவைத் தொகுதி அதிமுக வேட்பாளராகவும் இருப்பவர் நடராஜ். இந்திய

காவல் பணியில் உச்சத்தைத் தொட்ட அவர், இப்போது வாக்காளர்களைக் கவரும்

அரசியல்வாதியாக உருவெடுத்துள்ளார். காலையில் தொடங்கி மாலை முழுவதும்

Advertisement

பிரசாரம் செய்து அதனை இரவில் முடிக்கிறார். இருக்கையில்

அதிகாரியாக பணியை மேற்கொண்ட அவரை, இப்போது தேர்தல் களம் சுற்றிச்சுழல வைத்திருக்கிறது.

அவரது பிரசார அனுபவங்கள்.....

மக்களோடு மக்களாக இருந்து அவர்களிடம் நெருங்கிப் பழகினால் மட்டுமே அவர்களது பிரச்னைகளை முழுவதுமாக அறிந்து கொள்ள முடியும் என்பதை தெளிவாக அறிந்து வைத்திருக்கிறேன். இதனால் காவல்துறையில் பணியாற்றும்போது மக்களிடம் எப்போதும் நேரடித் தொடர்பில் இருந்தேன்.

அந்தத் துறையில் நான் மேற்கொண்ட செயல்பாடுகளும், பொதுமக்களிடம் கொண்டிருந்த நல்லுறவும் இப்போது பிரசாரத்துக்குச் செல்லும்போது மிகவும் உதவிகரமாக இருக்கிறது. தேர்தல் பிரசாரத்துக்குச் செல்வது ஒரு இனிமையான அனுபவமாக இருக்கிறது.

தினமும் காலை 7 மணிக்கே பிரசாரத்தைத் தொடங்கி விடுகிறேன். மயிலாப்பூர், மந்தைவெளி, தேனாம்பேட்டை போன்ற பல பகுதிகளில் பிரசாரத்துக்குச் செல்லும்போது போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் மாணவர்கள், காவல் துறையில் பணியாற்ற ஆர்வமுள்ளவர்கள், முதல் தலைமுறை வாக்காளர்கள் ஆகியோர் தங்களது கோரிக்கைகள், எதிர்காலம் குறித்து என்னிடம் தெரிவிக்கின்றனர்.

அனைத்துத் தெருக்களிலும் உள்ள பெண்கள், குழந்தைகள் என்னை அடையாளம் கண்டுகொள்கின்றனர். இது எனக்கு முற்றிலும் புதிய அனுபவமாகவும், உற்சாகம் மிகுந்த தருணமாகவும் இருக்கிறது என்றார் நடராஜ்.

சென்னை ஆர்.கே.நகரில்போட்டியிடும் வசந்திதேவி,கல்வித் துறையில் சிகரத்தைத் தொட்டவர். அவரையும்இந்தத் தேர்தல் களம் ஈர்த்துள்ளது. பேராசிரியை,பல்கலைக்கழகத்தின்

துணைவேந்தர், சமூக ஆர்வலர் என பன்முகங்களைக் கொண்டிருக்கும் வசந்திதேவி,

இப்போது சட்டப் பேரவைத் தேர்தல் வேட்பாளர் என்ற கூடுதல் முகத்தைப் பெற்றுள்ளார்.

ஏழை-எளிய-நடுத்தர மக்கள்

அதிகம் வாழும் ஆர்.கே.நகர் தொகுதியில் கல்வியில் கரைகண்ட வசந்திதேவி களம் காண்கிறார். அவரது பிரசார அனுபவம்...

கல்வித் துறையில் பணியாற்றியதற்கும், தற்போது ஒரு வேட்பாளராக களத்தில் நிற்பதற்கும் ஏராளமான வித்தியாசங்கள் உள்ளன. இரண்டு துறைகளுக்கும் எந்தவித தொடர்பும் இல்லை. அது வேறு உலகம்; இது வேறு உலகம். இப்போது முற்றிலும் புதிய களத்தில் நுழைந்திருக்கிறேன். கல்வித்துறையிலாவது குறிப்பிட்ட சதவீத மக்கள் என்னைப் பற்றி தெரிந்து வைத்துள்ளனர். ஆனால் ஆர்.கே.நகருக்கு நான் புதியவள்; பேராசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்களுடன் நட்புறவு கொண்டிருந்த எனக்கு இப்போது சாமானிய மக்களின் அடிப்படை பிரச்னைகள் குறித்து அறிந்து கொள்ளும் வாய்ப்பு கிடைத்திருத்திருப்பது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

ஆர்.கே.நகர் தொகுதியில் கடந்த சில நாள்களாக பிரசாரம் மேற்கொண்டு வருகிறேன். தற்போது வெயில் சுட்டெரிக்கிறது என்பதால் மாலை நேரத்தில் மட்டும் பிரசாரத்துக்குச் செல்கிறோம். இதனால் அதிகப்படியான வாக்காளர்களைச் சந்திக்க முடிகிறது.

ஊழல் இல்லாத ஆட்சி அமைப்போம், கல்வி, மருத்துவம் உள்பட பொதுமக்களின் அடிப்படை பிரச்னைகளுக்கு உடனடியாகத் தீர்வு காண்போம் என்ற வாக்குறுதியை அளித்தே பொதுமக்களிடம் வாக்கு சேகரித்து வருகிறோம். நான் வெற்றி பிறகு ஆர்.கே.நகரின் கல்வித்தரத்தை மேம்படுத்துவேன் என்று அந்த மக்களுக்கு உறுதியளித்திருக்கிறேன் என்றார் வசந்தி தேவி.

- அ.ஜெயச்சந்திரன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.