சென்னை

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் வாகன கண்காட்சிக்கு 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வருகை

DIN

தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் 2 நாள்கள் நடத்திய வாகன கண்காட்சியை 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் குழுமம், டி.சி. அவந்தி நிறுவனம் இணைந்து நடத்திய நவீன உயர் ரக வாகன கண்காட்சி நந்தம்பாக்கத்தில் உள்ள சென்னை வர்த்தக மையத்தில் சனிக்கிழமை தொடக்கியது.
இரண்டு நாள்கள் (சனி, ஞாயிறு) நடைபெற்ற இந்தக் கண்காட்சியில் 25 அரங்குகள் அமைக்கப்பட்டிருந்தன. இதில், டி.சி.அவந்தி, ஹார்லி டேவிட்சன், மெர்சிடிஸ் பென்ஸ், ஃபோர்டு, ஹோண்டா, டாடா மோட்டார்ஸ், மஹிந்திரா அன்ட் மஹிந்திரா உள்ளிட்ட இரண்டு, நான்கு சக்கர வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. இதனை காண்பதற்கு தொடக்க நாள் முதலே சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து பார்வையாளர்கள் வந்திருந்தனர்.
ரூ.65 ஆயிரத்திலிருந்து ரூ.56 லட்சம் வரையிலான இரு சக்கர வாகனம்: ஹோண்டா, மஹிந்திரா அன்ட் மஹிந்திரா நிறுவன மோஜோ இரு சக்கர வாகனம் (ரூ.2 லட்சம்), ஹார்லி டேவிட்சன் நிறுவனத்தில் ரூ.4.5 லட்சத்திலிருந்து (ஸ்ட்ரீட். அயர்ன், பாப்) முதல் ரூ. 56 லட்சம் (சிவிஓ) வரையிலான பல்வேறு வகையிலான இரு சக்கர வாகனங்கள் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன. அதேபோல், நான்கு சக்கர வாகனங்களில் அவந்தி, மெர்சிடிஸ் பென்ஸ் உள்ளிட்ட கார்களும் பார்வையாளர்கள் அதிகளவில் பார்வையிட்டனர்.
அத்துடன், வாகனங்களின் விலை,வாகன கடன் ஆகியவற்றை விசாரித்தனர். பலர் அருகில் நின்றவாறு, செல்ஃபி எடுத்தும் மகிழ்ந்தனர்.
சாகச நிகழ்ச்சி: அரங்கத்துக்கு வெளியே 5 பேர் கொண்ட இருசக்கர வாகன சாகச வீரர்கள் குழுவினர் இரு சக்கர வாகனத்தில் நின்றவாறு பல்வேறு சாகசங்களை செய்துகாட்டினர். இதை இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்டோர் கண்டுகளித்தனர்.
அதன்படி, முதல் நாளான சனிக்கிழமை 7 ஆயிரம் பேரும், ஞாயிற்றுக்கிழமை 8 ஆயிரம் பேர் என மொத்தம் 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டனர்.
இதுகுறித்து பார்வையாளர்கள் நவ்நீத், அம்ரிஷ் கூறியதாவது:-
தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நடத்திய இந்த கண்காட்சி வரவேற்புக்குரியது. இதன்மூலம், பல்வேறு உயர் ரக வாகனங்களை நேரில் காண முடிந்தது. சென்னை போன்ற சாலைகளில் நான்கு சக்கர வாகனம் ஓட்டுவதை விட பைக் ஓட்டுவதே சிறந்தது.
அதேபோல், நெடுந்தூரம் செல்வதற்கு தற்போது இரு சக்கர வாகனங்களை பலரும் பயன்படுத்துகின்றனர். அதன்படி, ஹார்லி டேவிட்சன் உள்ளிட்ட வாகனங்கள் விலையில் அதிகமானாலும், சாலையில் ஓட்டுவதற்கு நல்ல அனுபவம், பாதுகாப்பை தரும் வகையில் உள்ளது என்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று யாருக்கு அதிர்ஷ்டம்?

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

உதகையில் இ-பாஸ் நடைமுறை: பொதுமக்கள் வரவேற்பு

காரைக்கால் மாங்கனித் திருவிழா ஜூன் 19-இல் தொடக்கம்

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரணை: ஜூன் 21-க்கு ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT