சென்னை

33 காவல் ஆய்வாளர்கள் மாற்றம்

DIN

சென்னை பெருநகர காவல்துறையில் 33 ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, ஆணையர் கரண் சின்கா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதுகுறித்து காவல்துறை தரப்பில் கூறப்பட்டதாவது:
சென்னை பெருநகர காவல்துறையில் நிர்வாக வசதிக்காகவும்,விருப்பத்தின் அடிப்படையிலும்,பணியில் ஒழுங்கீனம் காரணமாகவும் காவல் ஆய்வாளர்கள் அவ்வப்போது பணியிட மாற்றம் செய்யப்பட்டு வருகின்றனர். இதன்படி, 33 காவல் ஆய்வாளர்களை பணியிட மாற்றம் செய்து, ஆணையர் கரண் சின்கா வியாழக்கிழமை உத்தரவிட்டார்.
இதில், ஆர்.கே.நகர் குற்றப் பிரிவு ஆய்வாளர் ஜி.பிரபு மாம்பலம் காவல் நிலையத்துக்கும், மாம்பலம் காவல் ஆய்வாளர் எம்.ரவி பூக்கடைக்கும், வளசரவாக்கம் காவல் ஆய்வாளர் ஜி.சந்துரு வடபழனிக்கும், அசோக்நகர் காவல் ஆய்வாளர் கே.ரமேஷ் சிட்லப்பாக்கத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இதுபோன்று, மொத்தம் 33 ஆய்வாளர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ள ஆய்வாளர்கள் ஓரிரு நாள்களில் புதிய பொறுப்பை ஏற்பார்கள் என காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணிக்கை மந்தமாக காரணம் என்ன? காங்கிரஸ்

அரசியலுக்கு வருவாரோ?

மாலை 4.30 மணி: பாஜக 17, காங்கிரஸ் 4 வெற்றி!

தமிழகத்தில் இரண்டாம் இடம் யாருக்கு?

கர்நாடக முன்னாள் துணை முதல்வர் வெற்றி

SCROLL FOR NEXT