சென்னை

உலக புத்தக தினம்: மாவட்ட மைய நூலகங்களில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு

DIN

உலக புத்தக தினத்தையொட்டி, சென்னை தேவநேயப் பாவாணர் நூலகம் உள்பட 32 மாவட்ட மைய நூலகங்களில் சிறப்புச் சொற்பொழிவு உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு பொது நூலக இயக்ககம் ஏற்பாடு செய்துள்ளது.
இதுதொடர்பாக அந்த இயக்ககம் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
பொது நூலக இயக்கத்தின் கீழ் செயல்படும் அனைத்து நூலகங்களிலும் உலக புத்தக தினம் (ஏப்.23) ஆண்டுதோறும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. நிகழாண்டும் ஞாயிற்றுக்கிழமை அன்று, சென்னை கன்னிமரா பொது நூலகம், அண்ணா நூற்றாண்டு நூலகம், 32 மாவட்ட மைய நூலகங்களிலும் உலக புத்தக தினம் சிறப்பாக கொண்டாடப்படவுள்ளது.
இதையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள விழாவில் தமிழக அமைச்சர்கள், பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், எழுத்தாளர்கள், சொற்பொழிவாளர்கள், தொழிலதிபர்கள், தமிழ் ஆர்வலர்கள் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகின்றனர்.
கிளை நூலகங்கள், ஊர்ப்புற, பகுதிநேர நூலகங்களில் நடைபெறும் பேச்சு, கட்டுரை, ஓவியப் போட்டிகளில் மாணவர்கள் அதிகளவில் பங்கேற்று பயனடையலாம் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சா.கந்தசாமி சொற்பொழிவு: சென்னை அண்ணாசாலையில் உள்ள தேவநேயப் பாவாணர் நூலகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு எழுத்தாளர் சா.கந்தசாமியின் சொற்பொழிவு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கடந்த பத்து ஆண்டுகளில் பாஜக செய்த சாதனை என்ன? - பிரியங்கா காந்தி

வெயில், கொன்றை, மஞ்சள்.. நினைவில் வருபவை!

‘அரண்மனை 4’ - மிகப்பெரிய வெற்றி: குஷ்புவின் வைரல் பதிவு!

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

SCROLL FOR NEXT