சென்னை

லாரி மீது கார் மோதல்: உயிர் தப்பினார் இயக்குநர் கௌதம் மேனன்

DIN

சென்னை, ராஜீவ்காந்தி சாலையில் லாரி மீது கார் மோதிய விபத்தில் பிரபல திரைப்பட இயக்குநர் கௌதம் வாசுதேவ் மேனன் லேசான காயத்துடன் உயிர் தப்பினார்.
தமிழ் திரைப்படத் துறையில் இயக்குநராக இருப்பவர் கௌதம் வாசுதேவ் மேனன். இவர் "மின்னலே', "வாரணம் ஆயிரம்', "காக்க...காக்க', "வேட்டையாடு விளையாடு', "நீதானே என் பொன்வசந்தம்' உள்ளிட்ட பல படங்களை இயக்கியுள்ளார்.
அவர் புதன்கிழமை நள்ளிரவு தனது விலை உயர்ந்த காரில் மாமல்லபுரத்தில் இருந்து சென்னை நோக்கி வந்தார். சென்னையை அடுத்த சோழிங்கநல்லூர் ஆவின் பால் பண்ணை பகுதியில், சாலை நடுவே திடீரென லாரி ஒன்று திரும்பியது. இதனால் நிலைத்தடுமாறிய கெüதம் வாசுதேவ் மேனின் கார் லாரி மீது மோதியது. இதில் கெüதம் மேனனுக்கு லேசான காயம் ஏற்பட்டது.
அருகில் இருந்தவர்கள் கெüதம் மேனனை மீட்டு பெரும்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அவர் அங்கு புறநோயாளியாக சிகிச்சைப் பெற்று திரும்பினார். கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சாம் பித்ரோடாவின் 'இம்சை' கருத்து! தலைவர்களுக்கு காங்கிரஸ் எச்சரிக்கை!

எனது சாதனையை ஜெய்ஸ்வால் முறியடிப்பார்: பிரையன் லாரா நம்பிக்கை!

மே 10-ல் 10 ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள்!

சாம் பித்ரோடா கருத்து - காங்கிரஸ் உறவை துண்டிக்குமா திமுக? மோடி கேள்வி

‘வக்கா வக்கா..’ இந்த முறை சிவப்புக்கானது!

SCROLL FOR NEXT